புதன், 4 ஆகஸ்ட், 2010

ஹன்சிகா போகிற வேகம் பிற நாயகிகளின் வயிற்றில் புளியைக் கரைப்பது

ஹன்சிகா மோத்வானி போகிற வேகம் பிற நாயகிகளின் வயிற்றில் புளியைக் கரைப்பது போல உள்ளதாம்.
புயல் மாதி வந்தார் என்று ஒரு வார்த்தை உண்டு தமிழில். அது ஹன்சிகாவுக்குத்தான் சாலப் பொருந்தும். அந்த அளவுக்கு வந்த வேகத்தில் டாப் கியருக்குத் தாவி டாப் மோஸ்ட் ஹீரோயின்களுக்கு பெரும் எரிச்சலாக மாறியுள்ளார் ஹன்சிகா.
வேலாயுதம் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் ஹன்சிகாவுக்கு கோலிவுட்டில் செம டிமான்ட் ஏற்படத் தொடங்கியுள்ளாம். இதற்குக் காரணம், ஹன்சிகாவின் பழக்க வழக்கம் அவ்வளவு அன்னியோன்யமாக உள்ளதால்தானாம்.
தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஹீரோக்கள் என முக்கியமான நபர்களிடம் அவர் படு தாராளமாக பழகுகிறாராம். மூத்த இளம் ஹீரோக்கள், முன்னணி இயக்குநர்கள், பிரபலமான தயாரிப்பாளர்களுக்கு இவரே போன் போட்டுப் பேசி நலம் விசாரிக்கிறாராம். உங்களது படத்தில் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்ச்சி அடைவேன் என்று மனம் உருகிப் பேசுகிறாராம்.
இது போதாதென்று பார்ட்டியும் வைத்து சிறப்பாக கவனிக்கிறாராம். இதைப் பார்த்தும், கேள்விப்பட்டும் முன்னணி ஹீரோயின்கள் கடும் எரிச்சலில் மூழ்கியுள்ளனராம்.
இவர் இப்படியே போனால் நம் கதி அதோ கதிதான் என்ற பீதியும் அவர்களுக்கு வந்துள்ளதாம். எனவே ஹன்சிகாவை முறியடிக்கும் வழிகள் குறித்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
கோலிவுட்டில் இப்போது ஹன்சிகா வைக்கும் விருந்துகள் குறித்துதான் விழுந்து விழுந்து பேசுகிறார்களாம்!

கருத்துகள் இல்லை: