செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

உலக தாய்ப்பால் வாரம் ,நிகழ்ச்சியில் குஷ்பு கலந்துக்கொண்டார்.



 ஆகஸ்ட் 1ம்  தேதி முதல் 7ம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ பிரிவு சார்பில் இன்று காலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நடிகை குஷ்பு கலந்துக்கொண்டார்.
நிகழ்ச்சியில் குஷ்பு பேசும்போது, ’’நான் கர்ப்பமாகி இருக்கும்போது, குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு முன்பு வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அதன்பிறகுதான் வீட்டில் ஓய்வாக இருந்தேன்.
முதல் குழந்தைக்கு இரண்டரை வயது வரையும், 2வது குழந்தைக்கு ஒன்றரை வயது வரையும் தாய்ப்பால் கொடுத்தேன். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைகள் தாய் மீது மிகவும் அன்பாக இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் குழந்தைகளுக்கு கிடைக்கும். 
அமெரிக்கா போன்ற வெளிநாட்டில் தாய்ப்பால் கொடுப்பதில்லை. புட்டிப்பால் தான் கொடுக்கிறார்கள் என்று இங்குள்ள தாய்மார்கள் சொல்கிறார்கள்.

அமெரிக்காவில் 30 சதவீத பெண்கள் தாய்ப்பால் கொடுக்கிறார்கள். இந்தியாவில் 20 சதவீதம் பேர்தான் 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுக்கிறார்கள்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதன் அவசியம் முதலில் தெரிய வேண்டும்.

பிறந்த ஒரு மணி நேரத்தில் கண்டிப்பாக குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

இப்போது, பம்ப் செய்து பாட்டிலில் வைத்து கொடுக்கிறார்கள். அதுகூட தவறு. காரணம், தாயின் அணைப்பில், குழந்தைக்கு தேவையான கதகதப்பான சூழ்நிலை கிடைக்கும்.

இயற்கையான வரம் இருக்கும்போது, ஏன் புட்டிப்பாலுக்கு செல்ல வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் முக்கியமானது என்பதை பிரச்சாரம் மூலம் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலையே வருந்தத்தக்கது’’என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: