செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

என் அஸ்தியை இங்கேயே கரைச்சுடு.சிவாஜி

அண்மையில் சிவாஜி கணேசன் வீட்டு பிள்ளையாருக்கு குடமுழுக்கு நடை பெற்றது. அதில் சிவாஜி குடும்பத்து நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். அப்பொழுது பிரபு அவர்கள் கூறியதாவது,

சில நாட்களுக்கு முன்பு எங்களுடைய ‘அன்னை இல்லம்’ வெளி வாசலில் இருக்கும் வரசித்தி விநாயகர் ஆலயத்திற்கு குடமுழுக்கு நடை பெற்றது.

1960-ம் வருஷம் நாங்கள் இந்த வீட்டுக்கு வந்தபோதே இந்தக் கோயிலை கட்டியாகிவிட்டது.எங்க தாத்தா சின்னய்யா மன்றாடியார் ஒவ்வொரு கல்லையும் பார்த்துப் பார்த்து கட்டிய கோயில் இது.எங்க வீட்ல கல்யாணம், கார்த்திகைன்னு எது நடந்தாலும் முதல்ல பிள்ளையாரிடம் போய்டறது வழக்கம். அப்பாவின் திருமண நாள், பிறந்த நாள் போன்ற விசேஷ நாட்களில் அங்கே அமர்க்களமா பூஜையெல்லாம் நடக்கும்.
குடமுழுக்கின்போது வந்திருந்த அப்பாவுக்கு வேண்டிய இன்னொரு பிரமுகர் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள். சுவாமிமலையைச் சேர்ந்த இவர் வாரணாசியிலிருந்து வந்திருந்தார். இவரது தொடர்புக்குப் பின்னே நெகிழ்ச்சியான சம்பவம் உண்டு.
1998-ம் வருஷம் அக்டோபர் ஒன்பதாம் தேதி அப்பா காசியிலுள்ள ‘மணிகர்ணிகா காட்Õடில் ஸ்நானம் பண்ணுகிறார். அப்போ எங்களுடன் இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள்!
அப்பா திடீரென்று அவரிடம்,காசியில் குளிப்பதன் மகிமையைப் பற்றியெல்லாம் கேட்கிறார். ‘இங்கே குளித்தால் மறுஜென்மம் கிடையாது என்பது ஐதிகம்Õ என்று கனபாடிகள் சொல்லும் போது, அப்பா சட்டென்று என்னைத் திரும்பிப் பார்க்கிறார். ‘நான் இறந்தவுடன் நம்முடைய இந்து முறைப்படி எல்லா காரியங்களையும் முடிச்சுட்டு,என் அஸ்தியை இங்கேயே கரைச்சுடு' என்றார் அமைதியாக.அவர் விருப்பப்படியே கனபாடிகள் உதவியுடன் செய்தேன். அந்த கிருஷ்ணமூர்த்திதான் இப்போது வந்திருந்தார். மாலை எங்கள் வீட்டில் யஜுர் வேதமெல்லாம் படிச்சு அதற்கு விளக்கமெல்லாம் தந்தார்! அன்று பூராவும் நான், பிரபு உள்பட அனைவரும் வேறு ஒரு தெய்வீக உலகத்தில் இருந்தோம்.

கருத்துகள் இல்லை: