வியாழன், 5 ஆகஸ்ட், 2010

கவுண்டர் சம்மதித்தால் தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான புதிய வில்லன்

கவுண்டமணி பழையபடி சென்னை தி.நகர் அலுவலகத்திற்கு தினமும் விசிட் அடிக்க ஆரம்பித்து விட்டார். மாலை‌நேர மொட்டை மாடி வாக்கிங்கும் உண்டு. இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆன தன்னை இறந்து விட்டதாக செய்தி கிளப்பி விட்ட ஆசாமிகள் யார்? யார்? என்பதை சுற்றம் மற்றும் நட்பின் மூலம் ஆராய்ந்து வரும் கவுண்டர், மீண்டும் பழைய பொலிவுடன் புதிய இரத்தம் பாய்ச்சப்பட்டவராக பளீச் என்று தோற்றமளிக்கிறார். கூடவே, மொட்டைத் தலையுடன் புதிய கெட்-அப் வேறு. கவுண்டர் சம்மதித்தால் தமிழ் சினிமாவிற்கு வித்தியாசமான புதிய வில்லன் ரெடி! என்கிறது விவரமறிந்த கோலிவுட். 16 வயதினிலே படத்திலேயே வில்லன்தானே காமெடி கவுண்டர்.

கருத்துகள் இல்லை: