வெள்ளி, 6 ஆகஸ்ட், 2010

தனது தம்பி இப்படி செய்தது தனது முதுகில் குத்தியதற்கு சமமானது : மனோ கணேசன்

இலங்கை ஆளும்தரப்புக்கு ஆதரவு தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன், கட்சின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இடை நீக்கப்பட்டதாக அக் கட்சியின் தலைவர் மனோ கணேசன்  தெரிவித்தார்.பிரபா கணேசனும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.திகாம்பரம் ஆகிய இருவரும் வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் அரசாங்க வரிசையில் அமர்ந்து கொண்டனர்.
முன்னதாக இவ்விரு எம்.பி,களும் இன்று காலை அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து அரசாங்கத்துடன் இணைந்துகொண்டனர்.தனது தம்பி இப்படி செய்தது தனது முதுகில் குத்தியதற்கு சமமானது என்று தற்போது இந்தியாவில் இருக்கும் மனோ கணேசன்  கூறினார். பிரபா கணேசன் அணி மாறியதால் தனது கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பிரநிதிதித்துவம் இல்லாவிட்டாலும் கட்சியின் கொள்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்

கருத்துகள் இல்லை: