சனி, 7 ஆகஸ்ட், 2010

புலிகளுக்கு பண சப்ளை செய்யும் "நெட்வொர்க்' : அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்: "இலங்கையில் போர் முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்யும் "நெட்வொர்க்' இன்னும் செயல்பட்டு கொண்டு தான் இருக்கிறது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது."பயங்கரவாதம்-2009' என்ற தலைப்பில் அமெரிக்க அரசு, ஒரு அறிக் கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கையில் உள்நாட்டு போர் முடிவடைந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும், பல்வேறு நாடுகளில் இருந்து, விடுதலைப் புலிகள் அமைப்புக்கு நிதி உதவி செய்யும் அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.இருந்தபோதும், புலிகளின் ஆயுதக் கொள்முதலுக்கு முக்கிய காரணமாக விளங்கிய குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்ட பின், நிலைமையில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது. புலிகள் அமைப்புக்கு நிதி திரட்டும், "நெட்வொர்க்' இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. புலிகள், தங்களுக்குத் தேவையான நிதியை திரட்டிக் கொள்வதற்கு, தமிழ் அறக்கட்டளை அமைப்புகளை பயன்படுத்திக் கொள்கின்றன.இவ்வாறு அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: