செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

MLM mafia, ஓராண்டில் ரூ.300 கோடி சுருட்டல்: புதிது, புதிதாக கிளம்புது மோசடி

கோவை, நிதிமோசடி குற்றங்களின் தலைநகராக மாறிவருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் 300 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீட்டு நிதி, பொதுமக்களிடம் இருந்து மோசடி நிறுவனங்களால் திட்டமிட்டு சுருட்டப்பட்டிருக்கிறது.
அத்தியாவசிய பொருட்களை "ஆன்லைனில்' வர்த்தகம் செய்வதாகவும், வெளிநாட்டு கரன்சி வாங்கி, விற்பதாகவும் விளம்பரப்படுத்திய மோசடி நிறுவனங்கள், பல ஆயிரம் பேரிடம் முதலீடு பெற்று, அவர்களை படுகுழியில் தள்ளின. குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்க்கும் ஆசையில் முதலீடு செய்து பணத்தை இழந்தோர், கோவை மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவிலும், கோவை மாநகர போலீஸ் மத்திய குற்றப்பிரிவிலும் புகார் அளித்து, சட்ட ரீதியாக நிவாரணம் பெற காத்திருக்கின்றனர். சங்கிலித்தொடர் நிதிமோசடி தொடர்பாக, கே.எஸ்., மெர்க்கன்டைல், கிரீன் லைப், பாசிபோரக்ஸ் உள்ளிட்ட ஏழு நிறுவனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மேலும் புதுப்புது வடிவங்களில் நிதி மோசடி குற்றங்கள் தலைதூக்கி வருகின்றன. சமீபத்தில், கோவை புறநகர் பகுதிகளுக்குச் சென்ற தனியார் நிறுவன விற்பனை பிரதிநிதிகள், "மல்டி லெவல் மார்க்கெட்டிங்' முறையில் வீட்டுமனை விற்பதாக தெரிவித்துள்ளனர்.
ஒருவர், ஒரு லட்சம் ரூபாயை நிறுவனத்தில் முதலீடு செய்தால், 2.75 சென்ட் அளவிலான வீட்டுமனை உடனடியாக பத்திரப்பதிவு செய்து தரப்படும். திட்டத்தில் சேர்ந்த நபர், மேலும் இரு உறுப்பினரை நிறுவனத்தில் சேர்த்து தலா ஒரு லட்சம் ரூபாயை முதலீடு செய்ய வைத்தால், அறிமுகம் செய்த நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் கமிஷனாக தரப்படும்' என்று கூறியுள்ளனர். இத்திட்டத்தில் உறுப்பினராக சேர முன்பணமாக 10 ஆயிரம் ரூபாய் செலுத்தி, எஞ்சிய தொகையை மூன்று மாத அவகாசத்தில் செலுத்தலாம் என்றும் கூறியுள்ளனர்.

இதை நம்பி பணத்தை முதலீடு செய்தோரின் பெயர் விபரங்களை ரசீதில் பதிவு செய்த நபர்கள், ஓரிரு நாட்களில் ரசீதை தபாலில் அனுப்புவதாக கூறிவிட்டுச் சென்றனர்; பல நாட்களாகியும் ரசீதும் வரவில்லை; வசூலித்த நபர்களும் மாயமாகிவிட்டனர்.பணம் செலுத்தியதற்கான ஆதாரம் இல்லாததால், போலீசில் புகார் அளிக்க வாய்ப்பின்றி தவிக்கின்றனர். இவ்வாறான மோசடி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் மகளிர் சுய உதவிக்குழுவினரிடமும் பணமோசடி செய்வது அதிகரித்துள்ளது. குழு உறுப்பினர்களுக்கு வங்கியில் தலா 10 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுத்தருவதாக கூறி, முன்பணமாக 300 ரூபாய் வீதம் வசூலித்த மோசடி நபர்கள் தலைமறைவாகி விட்டனர். இதுபோன்ற மோசடிகள் காரமடை, அன்னூர், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர், பீளமேடு, குறிச்சி, சுந்தராபுரம், தொண்டாமுத்தூர், பேரூர் பகுதிகளில் அதிகம் நடந்துள்ளன. இது தொடர்பாக போலீஸ், கலெக்டர் அலுவலகத்துக்கும் அதிகளவில் புகார்கள் சென்றவண்ணம் உள்ளன.

சிலர், இழந்தது பெரிய அளவிலான தொகை இல்லையென்பதால் போலீசில் புகார் அளிக்காமல் தவிர்த்து வருகின்றனர்; இது, மோசடி நபர்களுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது. இப்படி புதிது, புதிதாக நடக்கும் மோசடிக் குற்றங்களை தடுக்க முடியாமலும், மோசடி நடந்த பின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினாலும் பணத்தை மீட்க முடியாமலும் போலீசார் திணறுகின்றனர்.

இதுகுறித்து, பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த 1990களில் அதிகளவிலான நிதிமோசடி குற்றங்கள் நிகழ்ந்தன. ஒமேகா, ரமேஷ் கார்ஸ், அனுபவ் உள்ளிட்ட எண்ணற்ற நிறுவனங்கள் மக்களிடம் முதலீடு பெற்று, கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டின. அடுத்ததாக, கடந்த 2000ம் ஆண்டுகளில் கம்ப்யூட்டர் தொடர்பான குற்றங்கள் தலைதூக்கின."டேட்டா ப்ராஸசிங்' செய்து கொடுத்தால் கைநிறைய சம்பாதிக் கலாம் எனக்கூறிய ஏ.டி.எம்., இன்போ டெக், ஜெம் இன்போ டெக், நாப் இன்போ டெக் உள்ளிட்ட நிறுவனங்கள் 20 கோடி ரூபாயை மக்களிடம் முதலீடாக பெற்று மோசடி செய்தன.


.MANIMARAN - PERAMBALUR,இந்தியா
2010-08-03 15:40:56 IST
உண்மை இது தான். நான் கூட கோயம்பதஊரில் இழந்து உள்ளேன் . 2001 ஆண்டு DATA ENTRY இல் 50000 RS இழந்து உள்ளேன்.உழைக்காமல் முன்னேற நினைத்தேன். கடவுள் தண்டனை கொடுத்து விட்டார். சிநேகம் FINANCE மறக்க முடியாது. கணவனுக்கு தெரியாமல் மனைவி 3 லட்சம் மனைவிக்கு தெரியாமல் கணவன் 3 லட்சம் இன்வெஸ்ட் செய்தார்கள் 5 கோடி ருபாஉடன் ஓடி விட்டார்கள் , பிறகு WE CAN , அடுத்து ONLINE GOLD INVESTMENT ஆக கோவை இல் உழைக்காமல் முன்னேற சோம்பேறிகள் நிறைய உள்ளார்கள். உழைக்காமல் முன்னேற நினைத்தால் இதே கதிதான் எல்லோருக்கும் . திருந்துவார்களா கோவை மாக்கள் இல்லை மக்கள். அன்புடன் கீரனூர் MANIMARAN...
குருநாதன் - Singapore,இந்தியா
2010-08-03 15:13:34 IST
எத்தனை மோசடிகரர்கள் எத்தனை குறுக்கு வழி...., Bனால் உண்மையில் அவர்கள்தான் இந்தியாவில் பிழைக்க தெரிதவர்கள். இதுவரை இந்திய சரித்திரத்தில் ஒரே ஒரு மோசடி நபர் கூட தண்டிக்கப்படவில்லை.., மாறாக அவர் அழகாக வாழ்கையை அமைத்து கொள்கிறார். அப்புறம் என்ன "எல்லோரும் ஏமாத்த கத்துகிடணும் இதில் தப்பில்லை எப்போதும் ஒத்துகிடனும்"....
v.christopher - sanaa,ஜிம்பாப்வே
2010-08-03 13:09:52 IST
How the public will know, even police or concerned authorities does not know or taking bribe !. First of all they have to implement the law that all the name boards, business cards & certificate should carry the weblink, where it has been issued. So public can check on their own. And it has to be renewed or checked by authorities frequently that matter also they have to put in the website. It will reduce 99% problems, like cheating the investors, fake doctors, fake educational certificates & etc....
abdul hameed - dubai,இந்தியா
2010-08-03 10:15:42 IST
avarkal amanthu vittanar aka muttalkal...
முனைவர் பா சரவணன் - Shillong,இந்தியா
2010-08-03 09:39:31 IST
கைப்புள்ள கமெண்ட்ஸ் மிகவும் அருமை!!!!...
ராம் குமார் - rajapalayam,இந்தியா
2010-08-03 08:11:40 IST
namme janange rombe nallavange...evalo adichalum vaanguvaange.......
ரவி - chennai,இந்தியா
2010-08-03 07:47:53 IST
Severe punishment dont have in Indian government law for cheaters. That is the problem. If law is very strict then how can it ll be happen....
சாமி - bangkok,டோகோ
2010-08-03 06:59:58 IST
ஆக முட்டாள்கள் அதிகமாக உள்ள நகரம் கோவை என்று சொல்லாமல் சொல்கிறீர்கள். நிதி மோசடி மட்டும் இல்லை பொது கூட்டம் என்ற பெயரில் தேர்தல் மோசடிகள் வரிசை கட்டி நிற்கிறது கோவையில். பொதுவாக நம்ப ஆளு குறுக்கு வழியில் நிறைய சம்பாதிக்க நினைப்பவன். அந்த வியாதி தான் இப்போது அரசியலிலும் ஆட்டுவிக்கிறது. நீங்க வேணா இப்போ ஒரு நோட்டீஸ் அடிச்சு ஒட்டுங்க, ஒரு பாட்டில் உச்சா இரு நூறு ரூபாய்க்கு வாங்குகிரோம்னு. நாளைக்கே எவ்வளவு பேரு கையில பாட்டில புடிச்சுகிட்டு வரிசையில வந்து உங்க கடை முன்னாடி நிக்கிறாங்கன்னு. கொஞ்சமாவது யோசிக்கணும், நாலு பேரை விசாரிக்கணும் அப்படி எல்லாம் இல்லை. எந்த இடத்துல போஸ்டர பாத்தாலும் உடனே அதை நம்பி பணத்தை கையில தூக்கிட்டு ஒரு கூட்டம் கிளம்பிடுது. போலீஸ் காரங்களும் தன்னால எதையும் விசாரிக்கறது இல்லை. கம்ப்ளைன்ட் கொடுத்தாவே விசாரிக்கறது பெரிய விசயமா இருக்கு....
V.Subbarao - Singapore,இந்தியா
2010-08-03 06:09:10 IST
நமது ஆட்சியிலுள்ள 'நல்லோரால்' அவர்களின் ஆசைப்படி செயல்புரிய பணியிலமர்த்தப்பட்ட இக் காவலர்கள் என்ன செய்யமுடியும். ஆட்சியாளர்களின் பாதுகாப்பிற்கும், ஊர்வலத்திற்கும், பாராட்டுவிழாவிற்கும் பார்வையாளர்களாகவும், ஆட்சியாளரின் எடுபிடிகளுக்கு தொண்டு செய்யவும், அவ்வப்பொழுது தனகுடும்பத்தினரை கவனிக்கவே நேரமில்லை. இது போன்ற போருலாதாரகுற்றங்களுக்கு அதில் திறமையாந ஒரு தனிப்பகுதியினை, சட்டத்தை, நீதிமன்றத்தை அமைத்து "செயல் படுத்தினால்" (ரிபிட்) செயல்படுத்தினால் மட்டுமே விரைவில் சரியாகும். பெராசைகோண்ட மக்கள், அவர்களின் ஆசையில் விளைந்த அவசரசெயல்....
ம சுந்தரம் - Tuticorin,இந்தியா
2010-08-03 05:34:25 IST
It shows the greedy and lust for quick money with out labour, sweating.Such people are more in TN. Middle level policitians are also indulging such misconduct with the support of their counterpart at the hisher echolon. Why dont go to Post Offices for investments . The DOP gives security, safety, and higher rate of interest. It is legal. Others(Private) are illegal....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-08-03 01:39:29 IST
மக்களே, என்னதான் உடம்பு பூரா எண்ணெய்ய தேச்சுட்டு பீச்சு மணல்ல பொறண்டாளும் ஒட்டுறதுதான் ஒட்டும்பாங்க. அதுமாறி, நீங்க என்னதான் பொரண்டு பொரண்டு சம்பாரிச்சாலும் தங்குறது தான் தாங்கும். வருவதுதான் வரும். அதனால எவனாச்சும் நிறய குடுக்கிறேன்... நிறய குடுக்கிறேன்... ன்னு கூவிக்கிட்டே வந்தா அவன் பின்னாடி காதுவரைக்கும் பல்லை இளிச்சுக்கிட்டே போறத நிறுத்துங்க. மூச்சா போய்ட்டிருக்கிரப்பவே கிட்னிய திருடுற காலம் இது. இதெல்லாம் நடக்குமான்னு சூதனமா யோசிச்சு பாருங்க....

கருத்துகள் இல்லை: