புதன், 4 ஆகஸ்ட், 2010

திருச்சியில் சிவாஜி, எம்.ஆர். ராதாவுக்கு சிலை: கேஎன். நேரு தகவல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர். ராதா ஆகியோருக்கு திருச்சி [^]யில் சிலை நிறுவப்படும் என தமிழக அமைச்சர் [^] கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கத்தின் 5-ம் ஆண்டு விழா, கலைச்செம்மல் விருது [^] வழங்கும் விழா, பொற்கிழி வழங்கும் விழா, புத்தகம் வெளியீட்டு விழா போன்றவை திருச்சி ஆர்.ஆர்.சபாவில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு திருச்சி மாவட்ட நாடக நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளர் முகமது மஸ்தான் தலைமை தாங்கினார். புறநகர் மாவட்ட இசை நாடகப் பிரிவு தலைவர் கிருஷ்ணப்பா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக அமைச்சர் கே.என்.நேரு, நடிகர் ஹரிஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது,

தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகாலமாக திராவிட இயக்கங்கள் ஆட்சி பொறுப்பு நடத்த நாடகம் தான் அடிப்படையான காரணம்.

அண்ணா, கருணாநிதி [^] என அடுத்தடுத்து நாடக கலைஞர்களாக ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள். முதலமைச்சர் கருணாநிதி சென்னை அருகே 10 ஏக்கர் நிலத்தில் நாடக கலைஞர்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

அதே போன்று, திருச்சி அரியமங்கலத்திலும் நாடக கலைஞர்களுக்கு வீடுகள் ஒதுக்கி, கட்டப்பட்ட வீடுகளாக நாடக கலைஞர்களுக்கு வழங்க உள்ளோம்.

திருச்சியில் நடிகர் திலகம் சிவாஜியின் சிலையை நிறுவ வேண்டும் என்பது ஆசை. அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. அதே போன்று நடிகவேள் எம்.ஆர்.ராதா சிலையும் திறந்து வைக்கப்பட உள்ளது.

விழாவில் சிறந்த நாடக கலைஞர்களுக்கு கலைச்செம்மல் விருதையும், நலிந்த கலைஞர்களுக்கு பொற்கிழியையும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கி கவுரவித்தார்.

கருத்துகள் இல்லை: