சனி, 7 ஆகஸ்ட், 2010

பிரித்தானியவிற்கான இலங்கைத் தூதரை மாற்ற ஜனாதிபதியிடம் மனு.

பிரித்தானியாவிற்கான இலங்கைத் தூதருடைய சேவை ஓப்பந்தக்காலம் முடிவடையவுள்ள நிலையில் அவரை மாற்ற லண்டன் வாழ் இலங்கையர்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது. முன்னாள் நீதியரசாரன தூதர் ஜனாதிபதிக்கு மிக நெருக்கமானவர் எனவும் அவரது சேவைக்காலம் நீடிக்கப்படலாம் என நம்பும் லண்டன்வாழ் சிங்கள மக்கள் அவரை மாற்றி லண்டனில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் ஒருவரை நியமிக்க முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக மேலும் தெரியவருகின்றது.

ரணதுங்க எனப்படும் உளவியல் நிபுணரான இவர் ஜாதிக கெல உறுமயவின் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவிற்கு நெருக்கமானவர் எனக் கூறப்படுகின்றது. இவரை நியமிக்குமாறு வேண்டி லண்டன் வாழ் சிங்கள மக்களின் ஒரு தொகையினரால் மனு ஒன்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஊடாக ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட ஒருவர் இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: