சனி, 7 ஆகஸ்ட், 2010

சென்னை மாநகரத்தின் மெட்ரோ ரயில் 1471 கோடி ரூபாய்

சென்னை மெட்ரோ ரயில்களை வடிவமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி, 1471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் பெட்டிகள் முழுக்க முழுக்க குளிர்சாதன வசதிகளுடன் தயாரிக்கப்படுவதுடன், மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளது.

சென்னை மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான ரயில் பெட்டிகளை வாங்குவதற்கான ஒப்பந்தம், தனியார் நிறுவனம் ஒன்றிக்கு 1471 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அந்த நிறுவனம் 168 ரயில் பெட்டிகளை தயாரித்து வழங்க உள்ளது. அனைத்து பெட்டிகளிலும் குளிர்சாதன வசதிகள், தானியங்கி கதவுகள், கண்காணிப்பு கேமரா, மாற்று திறனாளிகள் வசதிகளுக்கான சக்கர நாற்காலிகள் நிறுத்தி வைப்பதற்கான தனி இடம் என, பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த ரயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட உள்ளது.

மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய விதத்தில் இந்த ரயில் உருவாக்கப்பட உள்ளது. காலை, மாலை மற்றும் முக்கிய நேகரங்களிலும் 3 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும், 4 பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரயிலில் 1276 பேர் பயணம் செய்ய முடியும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை: