வெள்ளி, 17 நவம்பர், 2017

17 வயது மாணவி; 10 நாட்கள்; நான்கு பேர்: பெங்களூரில் மீட்ட போலீசார்! 17-year-old kidnapped, raped by 4 men over 10 days in Whitefield lodge


வெப்துனியா :கர்நாடக மாநிலம் பெங்களூரில் 17 வயது மாணவியை இரண்டு பேர் கடத்தி சென்று 10 நாட்களாக ஹோட்டலில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.குறித்த 17 வயது மாணவி நண்பார்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொள்ள ரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார். அப்போது இருவர் அந்த மாணவியை ஏமாற்றி அவர்களோடு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் மாணவியை ஹோட்டல் அறை ஒன்றில் அடைத்து வைத்து 10 நாட்களாக மாறி மாறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இந்த சம்பவம் ஹோட்டல் உரிமையாளருக்கு தெரியவர, போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய அவரும் சேர்ந்து அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்நிலையில் மாணவியை காணவில்லை என போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.


பின்னர் பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறித்த ஹோட்டலில் ஆய்வு செய்த போலீசார் அலங்கோலமான நிலையில் அந்த மாணவியை மீட்டனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை மற்றும் புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்து கைது செய்தனர்.;
;அந்த நான்கு பேர் மீது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர்கள் பாதிக்கப்பட்ட அந்த 17 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதிபடுத்தப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: