மாலைமலர் :சசிகலா உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நடைபெற்ற ரெய்டு முடிவடைந்த நிலையில், ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டார்.
ரெய்டு முடிந்ததும் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார் ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக்
சென்னை:
சசிகலாவின் குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 9-ஆம் தேதி முதல் சோதனையில் ஈடுபட்டனர். ஐந்து நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை இன்று நிறைவுபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
சோதனையின் போது ஏராளமான ஆவணங்கள், வங்கிக்கணக்குகள் குறித்த விபரங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறியிருந்தனர். கையகப்படுத்தப்பட்ட ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு வருவதாக கூறிய அதிகாரிகள், சம்பந்தப்பட்டவர்களை சம்மன் அனுப்பி விசாரணைக்கு உள்படுத்தப்படுவர் என தெரிவித்திருந்தனர்.
சென்னை மகாலிங்கபுரத்தில் உள்ள ஜெயா டி.வி சி.இ.ஓ விவேக் இல்லத்தில் சோதனை நிறைவு பெற்ற பின்னர், ஏராளமான ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர். வருமான வரிசோதனை முடிந்த பிறகு விவேக்கை அங்கேயே சம்மன் வழங்கி விசாரணைக்காக வருமானவரி துறையினர் அழைத்து சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக