மாலைமலர் :கோவையில் நடத்தியது போல தமிழ்நாட்டில்
உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நான் ஆய்வு செய்வேன் என்று கவர்னர்
பன்வாரிலால் புரோகித் கூறினார்.
கோவை:
கோவை பீளமேடு ஜீ.வி. ரெசிடென்சி அடுக்குமாடி குடியிருப்பில் 248 வீடுகள்
உள்ளன. இங்கு குடியிருக்கும் மக்கள் மக்கும், மக்காத குப்பைகளை தனியாக
பிரித்து மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
இதையடுத்து தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்படும் இந்த குடியிருப்பை சேர்ந்த பொதுமக்கள், கோவையை சேர்ந்த தன்னார்வ தொண்டு அமைப்பினர், இளம் தொழில் முனைவோர்களுடன் கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துரையாடினார்.
அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது,
தென் இந்தியாவின் மான்செஸ்டரான கோவைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கோவை தென்னிந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் இங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தேசிய அளவில் கல்வி அறிவு பெற்றவர்களின் சராசரியை விட கோவையில் அதிகமாக உள்ளது. கோவையில் கல்வி அறிவு பெற்றவர்கள் 89.23 சதவீதம். இது தேசிய சராசரியான 74.04 சதவீதத்தை விட அதிகம். இந்தியாவில் 4 முக்கிய தொழில் முதலீட்டு நிறுவனங்களில் கோவையும் ஒன்றாக திகழ்கிறது. கொங்கு தமிழுடன் கோவை மாநகரம் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக