புதன், 15 நவம்பர், 2017

கடந்த கால ரெயிட் வரலாறுகள் ... தூங்கிப்போன நீதி...

நத்தம் விஸ்வநாதனிடம் ரெய்டு நடந்து 2 ஆண்டும்
, அன்புநாதனிடம் ரெய்டு நடந்து ஒன்றரை ஆண்டும்,
சேகர்ரெட்டி யிடம் ரெய்டு நடந்து 1ஆண்டும்,
ராம் மோகன் ராவிடம் ரெய்டு நடந்து ஒன்றரை ஆண்டும்,
விஜயபாஸ்கரிடம் ரெய்டு நடந்து 6 மாதமும் ஆகிறது.
கேதன் தேசாயிடம் ரெய்டு நடந்து 7 ஆண்டுகள் ஆகின்றன.
முத்திரைத்தாள் மோசடி மன்னன் அப்துல கரீம் தெல்கி செத்தே போனான். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்குரிய முதன்மைக்குற்றவாளி, ஆசி வழங்கிக் கொண்டு கடற்கரையில் மீளாத்துயில் கொண்டுள்ளார். 
9000 கோடி ஏமாற்றிப் போன, விஜய் மல்லையா அடுத்த கடனுக்கு இங்கிலாந்து கடற்கரையில் அழகிகளுடன் கும்மாளமடித்தபடி அடிப்போட்டுக் கொண்டிருக்கிறார். 
சேகர் ரெட்டியிடம் பிடித்த 33 கோடி எங்கிருந்து போனதென்றே ரிசர்வ் வங்கிக்குத் தெரியவில்லை.
 பாஜக-வுக்கு வந்த 800 கோடி நன்கொடை எங்கிருந்து வந்ததென்றே தெரியவில்லை. 
மூணு டாங்கர் லாரிகளில் பிடித்த கட்டுக்கட்டான பணம் யாருடையதென்று இதுவரை மர்மம். 
ரெயில் கூரையில் ஓட்டை போட்டு அடித்துப் போன பலகோடி ரூபாய் வழக்கு என்னானது? 

வருடத்திற்கு எந்த நொம்பலமும் இல்லாமல் கடன் மேல் கடன் வாங்கித் திருப்பிக் கட்டாமல், அரசே இரண்டரை லட்சம் கோடி பெருமுதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்கிறது. 
எம்புட்டுக் கோடி பட்ஜெட் போட்டு வருசா வருசம் ஆயுதங்களைக் கணக்கு வழக்கில்லாமல் வாங்கிக் குவித்தாலும் எல்லையில் சண்டை வந்தால் 10 நாட்களுக்குக் கூடப் பத்தாது என்று நாக்கூசாமல் சொல்கிறார்கள். 
பலகோடி மோசடி ஹர்ஷத் மேத்தா செத்தொழிந்து பல வருடங்களாகிவிட்டன. 
வீரப்பன் கொன்று குவித்த யானைகளைத் தின்று குவித்தது யாரென்று இதுவரை தெரியாது. 
அவர்கள் வெட்டித்தள்ளிய சந்தனமரங்களை விற்றுத் தின்றவர் எவரென்று தெரியாது. 
சுகமாகத் தூங்குகிறது சகாயம் அறிக்கை. எது எப்புடியானா என்ன? 
அடுத்த தேர்தலுக்கு ஓட்டுக்கு ஐநூறா? ஆயிரமா? ரெண்டாயிரமா? கெடா விருந்தா? பிரியாணியுடனா? குவாட்டருடனா? 
அதிலும் ஜிஎஸ்டி இல்லாத குவாட்டருடனா? அம்புட்டுத்தான் Breaking News உடைஞ்சு Broken Nes ஆகிப் போச்சு! வேற வேலை ....... இருந்தாப் பாரு. - Govindaraj Ramaswamy  : 
நமக்கு வாட்ஸ் அப்பில் வந்தது.#பொழப்பைபாருலே:

கருத்துகள் இல்லை: