மாலைமலர் :மத்திய பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு கிடைத்த தோல்வி, மக்களின் கோபத்தை காட்டுவதாக அமைந்துள்ளது என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
ம.பி. இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி: மக்களின் கோபத்தை வெளிப்படுத்துகிறது - அகிலேஷ் யாதவ்
லக்னோ:
மத்திய பிரதேசம் மாநிலத்தின் சித்ரகூட் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட 12 கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சுமார் 65 சதவீத வாக்குகள் பதிவாகின.
இதற்கிடையே, வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. இறுதியில், பா.ஜ.க. வேட்பாளர் சங்கர்லால் திரிபாதியை 14,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி காங்கிரஸ் வேட்பாளர் நிலான்ஷு சதுர்வேதி வெற்றி பெற்றார்.
இந்நிலையில், ம.பி. இடைத்தேர்தலில் பெற்ற தோல்வி பா.ஜ.கவினர் மேல் மக்களுக்கு இருக்கும் கோபத்தையே காட்டுவதாக அமைந்துள்ளது என சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறுகையில், மத்திய பிரதேசம் மாநிலம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. பா.ஜ.க.வினர் மேல் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அவநம்பிக்கை மற்றும் கோபத்தையே இந்த தோல்வி காட்டுகிறது. ஜி.எஸ்.டி மற்றும் பண மதிப்பிழப்பின் உண்மை நிலையை மக்கள் உணர்ந்துள்ளனர். குஜராத் தேர்தலிலும் இந்த தோல்வி எதிரொலிக்கும் என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக