சனி, 18 நவம்பர், 2017

போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு!


நக்கீரன் : மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   போயஸ்கார்டனில் குறிப்பாக பூங்குன்றன் பயன் படுத்திய அறையில் சோதனை நடைபெற்று வருகிறது.வேதா இல்லம் ஜெயலலிதாவின் நினைவிடம் ஆக்கப்பட்டு, அது அரசுடமை ஆக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், ;நீதிமன்றத்தின் உத்தரவை பெற்று இந்த சோதனை நடைபெற்று வருகிறது.சசிகலாவினர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் இடங்களில் நடந்த வருமான வரி சோதனையைத்தொடர்ந்து இன்று இரவு போயஸ்கார்டனில் சோதனை நடைபெற்று வருகிறது.
சசிகலாவின் குடும்பத்தினர் தவிர ஜெ.விடம் 20 ஆண்டுகளக  தனி உதவியாளராக இருந்த பூங்குன்றன் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  சோதனையை தொடர்ந்து பூங்குன்றனிடம் நேரில் விசாரணை நடத்தப்பட்டது.  இந்த விசாரணை முடிந்து இன்று இரவு வெளியே வந்தார்.  இதன் பின்னர் போயஸ் கார்டனில் பூங்குன்றன் அறையில் சோதனை நடத்தப்படுகிறது. பூங்குன்றன் அடையாறு இல்லத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் தொடர்பாக மேலும் சில ஆவணங்கள் சம்பந்தமாக இங்கு சோதனை நடைபெற்று வருகிறது.

ஜெ. இருந்தபோது அரசியல் பிரமுகர்கள், கட்சியினர் வந்து போகும் முக்கியமான அறையாக இருந்தது பூங்குன்றன் அறை.  அங்கு தற்போது சோதனை நடைபெற்று வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சோதனை நடைபெறுவதால் வேதா இல்லத்தின் 200 மீட்டருக்கு முன்பாகவே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வேதான் நிலையத்திற்கு அருகே இருக்கும் ஜெயா டிவியின் பழைய அலுவலகத்தில் ஏற்கனவே சோதனை நடைபெற்றது.  அந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்.  சோதனைக்கு பின்னரே போயஸ் இல்லத்தில் நடைபெறும் சோதனை குறித்த முழு விபரம் தெரியவரும்.  சோதனை நடைபெற்று நிலையில் போயஸ்கார்டனில் தற்போது பூங்குன்ற அங்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: