தினத்தந்தி :ராமேசுவரம் மீனவர்கள் மீது நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து
இந்திய கடலோர காவல்படையினர் மீது தமிழக போலீசார் வழக்கு பதிவு
செய்துள்ளனர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட
விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, இந்திய கடலோர காவல்படைக்கு
சொந்தமான ராணி அபாதா-77 என்ற கப்பல் அந்த பகுதியில் ரோந்து வந்தது.
கடலோர காவல்படை கப்பலில் இருந்து 7 வீரர்கள் இறங்கி, ஒரு ரப்பர் படகு மூலம்
அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை விரட்டியடித்ததோடு,
மரிய ஜெபமாலை என்பவரது படகை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.<
அதில் படகில் இருந்த பிச்சை ஆரோக்கியதாஸ் (வயது 37), ஜான்சன் (32) ஆகிய
மீனவர்கள் மீது துப்பாக்கி குண்டு உரசிச் சென்றதில் அவர்கள் காயமடைந்தனர்.
மேலும் படகில் இருந்த குவிட்டோ (38), சாண்ட்ரோ (38), நிசாந்த் (21), ஜாக்சன் (32) ஆகிய மீனவர்களையும், கடலோர காவல் படையினர் தாக்கி விட்டுச் சென்றனர்.
தாக்கப்பட்ட மீனவர்கள் நேற்று காலை ராமேசுவரம் திரும்பினர். அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மீன்துறை உதவி இயக்குனர் ஐசக் ஜெயக்குமார், கியூ பிரிவு போலீசார், உளவுப்பிரிவு போலீசார், வருவாய்த்துறையினர் உள்பட போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று காயமடைந்த மீனவர்களிடம் விசாரணை நடத்தினர்.
துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட படகை அதிகாரிகள் பார்வையிட்டனர். அப்போது படகு எவ்வித சேதமும் அடையவில்லை என்பது தெரியவந்தது.
இந்த சம்பவம் குறித்து மீனவர் பிச்சை மண்டபம் கடலோர போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இந்திய கடலோர காவல் படையினர் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 கருத்து:
A great post and an informative blog on Tamil news online
கருத்துரையிடுக