tamilthehindu : பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் வருமானம் குறித்து பிரதமர்
மோடியிடம் கேளுங்கள் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி
தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல் காந்தி.
அப்போது பேசிய அவர், ''என்னிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்கிறீர்கள். நானும் எப்போதும் பதில் சொல்கிறேன். ஆனால் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் வருமானம் குறித்து ஏன் நீங்கள் பிரதமரிடம் கேட்பதில்லை?'' என்று கேள்வி எழுப்பினார்.
பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா நிர்வகிக்கும் நிறுவனம் ஒன்றின் வருவாய் பல மடங்கு அதிகரித்துள்ளதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என்றுகூறி அவர் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி, அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக