செவ்வாய், 14 நவம்பர், 2017

புலவர் முனைவர் மா. நன்னன் ! 66 வயதில் நூல் எழுத தொடங்கி 120 நூல்கள் எழுதி முடித்தார்


புலவர் பட்டம் இப்போது 'பி.லிட்' என (1976இலிருந்து) மாற்றப்பட்டு விட்டது. புலவர் பட்டம் பெற்ற பலரும் முனைவர் பட்டம் பெற்றுவிட்டதால் , பெயரோடு புலவர்பட்டம் போடுவோர் குறைந்தனர். பேரா. மா.நன்னன், பேரா.பொற்கோ, வரலாற்றறிஞர் செ. இராசு, தஞ்சை பேரா. மு.இளமுருகன் முதலிய சிலரே முனைவர் பட்டம் பெற்ற போதும் புலவர் பட்டத்தை மறப்பதில்லை. தமிழாசிரியத் தகுதிக்கு நான்காண்டுகள் படித்து வாங்கும் பட்டத்தைப் 'புலவர்' எனக் கூறிக் கொண்டாலும், சான்றித ழில் 'வித்துவான் 2(D)' என்றுதான் வடமொழியில் இருக்கும். பெயரோடு *புலவர் எனப் போடுவதன் பின்னே தமிழின மீட்புவரலாறு உள்ளது!
 1924இல் அறிமுகமான தமிழ்ப்புலமைக் கல்வி, நூறாண்டு காண்பதற்கு முன்பே பி.லிட் ஆகிவிட்டது. புலவர் எனஒரு படிப்பு இருந்த வரலாற்றைச் சிலரின் பெயரைக் கொண்டுதான் இனி தெரிந்துகொள்ள முடியும். பெயரால் நினைவூட்டிய மா.நன்னன்ஐயா 7.11.2017இல் மறைவெய்திவிட்டார் ; 30.7.1923ஆம் நாள் பிறந்து 94அகவை நிறைவெய்திய முழுவாழ்வினர் ; கருப்புச்சட்டை அணிந்த உடலோடு விடைபெற்ற உறுதியான நாத்திகர்.


சாதி மறுப்பு மணமுடிக்க முடியாத குறை அவருக்கிருந்தது. மூத்தமகள் வேண்மாள் - இரா.செம்மல் திருமணம் அக்குறை தீர்த்தது.அதற்குக் காரண மாய் அமைந்தவர்பேரா.இரா.இளவரசு. அண்ணாமலை பல்கலைக்கழகப் புலவர் வகுப்பில் திருஞானசம்பந்தமாய் இருந்தவர், பெரியார் இயக்கத் தொடர் பால் நன்னன் ஆனார்.1942 -1943இல் அவரோடு உடன்பயின்ற நாராயண சாமி (நாவலர்)இரா.நெடுஞ்செழியன் ஆனார். இராமையா க.அன்பழகன் ஆனார். சீனிவாசன் இரா.செழியன் ஆனார்.

கொள்கை உறுதியைக் காட்ட இவர்கள் இணைந்தெடுத்த படத்திற் குச் சூட்டிய பெயர் 'கடற்பாறைகள்'. தாம் பிறந்த காவனூரில் தொடக்கப் பள்ளியாசிரியராய்ப் பணிதொடங்கிய இவர் தமிழாசிரியரானது கோவையில்!

'காலச்சக்கரம்', 'வெரைட்டி' (இருமொழி இதழ்) எனக் கோவையிலிருந்து அப் போது வெளியான இதழ்களில் எழுதத் தொடங்கிய இவர்,நூல் எழுதத் தொடங் கியது 66ஆம் வயதில்! இடைப்பட்ட காலத்தில் 120க்கு மேற்பட்ட நூல்களை எழுதிக்குவித்தது இன்னும் வியப்பு!
புலவர் முனைவர் மா. நன்னன்

கருத்துகள் இல்லை: