Veera Kumar Oneindia Tamil :
சென்னையில் பரபரப்பு... கத்திமுனையில் 50 பெண்களை பலாத்காரம் செய்த காமுகன்
கைது-
சென்னை: கத்தி முனையில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து
நகைகளையும் கொள்ளையடித்த, காமுகனை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த வில்லியம்ஸ் நேற்று தனியாக நடந்து
சென்றபோது, டூவீலரில் வந்த வாலிபன் ஒருவன் திடீரென கத்தியை காட்டி மிரட்டி
அவரிடமிருந்த ரூ.8,500 பணத்தை வழிப்பறி செய்துவிட்டு தப்பியோடியுள்ளான்.
இதுகுறித்து வில்லியம்ஸ் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதைத் தொடர்ந்து,
கிண்டி, வேளச்சேரி, குமரன் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்,
போலீசார் வாகன சோதனையை கடுமையாக்கினர்.
மடக்கிப்பிடித்த போலீசார்
இந்த நிலையில், குமரன் நகர் பகுதியில் போலீசாரை கண்டதும், திடீரென பைக்கின்
வேகத்தை கூட்டி தப்பிக்க முயன்றார் ஒரு வாலிபர். சந்தேகத்தின்பேரில்
போலீசார் அந்த பைக்கை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் அவரது பெயர்
அறிவழகன் (29) என்பதும், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும்
தெரியவந்தது.
சிசிடிவி படங்கள்
சிசிடிவி படங்கள்
ஏற்கனவே சென்னையில் வழிப்பறி மற்றும் கொள்ளை நடைபெற்ற பகுதிகளில் இருந்த
சிசிடிவி கேமராக்களில் பதிவான உருவப்படங்களும் போலீசாரிடம் இருந்தன. அதை
ஒப்பிட்டு பார்த்தபோது அறிவழகன் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்தது
தெரியவந்தது.
செல்போனில் அந்தரங்க வீடியோ
அறிவழகனிடம் சோதனை போட்டபோது, அவனிடம், கத்தி மற்றும் மொபைல் செல்போன்கள்
பறிமுதல் செய்யப்பட்டன. அந்த செல்போனில் பெண்களின் புகைப்படங்கள் இருந்தன.
மேலும், சில பெண்களுடன், அறிவழகன் உடலுறவு கொள்ளும் வீடியோக்களும் இருந்தன.
இதையடுத்து விசாரணை வேகம் பிடித்தது.
50 பெண்களிடம் பலாத்காரம்
50 பெண்களிடம் பலாத்காரம்
அடையாறு துணை போலீஸ் கமிஷனர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள், கிண்டியில்
அறிவழகனை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று, துருவிதுருவி விசாரணை நடத்தினர்.
அப்போது திடுக்கிடும் உண்மைகளை கக்கினான் அறிவழகன். கத்தியை காட்டி
மிரட்டி, 50க்கும் மேற்பட்ட பெண்களை அவன் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல்
அப்போது வெளியானது.
பட்டதாரி வாலிபர்
அறிவழகன் பிஎஸ்சி-கணிதம் படித்துள்ளாான். பெங்களூரில் ஒரு சாப்ட்வேர்
நிறுவனத்தில் சில காலம் வேலைக்கு போயுள்ளான். பிறகு எந்த வேலைக்கும் போனது
கிடையாது. அதேநேரம், தனது படிப்பறிவை பயன்படுத்தி, பேஸ்புக்கில் தர்மபுரி
மற்றும் கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவிகளுக்கு காதல் வலை
வீசியுள்ளார். வலையில் விழுந்ததும் லாட்ஜுக்கு கூட்டிச் சென்று அந்த
பெண்களுடன் உல்லாசம் அனுபவித்து அதை வீடியோவாக எடுத்துள்ளான் அறிவழகன்.
பின்னர் அவர்களிடம் நகைகளை வாங்கி செலவு செய்தான்.
காதல் வலை
காதல் வலை
3 வருடங்கள் முன்பு அறிவழகன் சென்னைக்கு வந்துள்ளான். கிண்டி அம்மாள் நகர்,
நரசிங்கபுரம், அம்பத்துார், ஆவடி, வளசரவாக்கம், ராயலா நகர், மேற்கு
மாம்பலம் என, பல இடங்களில் வாடகை வீட்டில் தங்கியுள்ளான். அப்போது பக்கத்து
வீடுகளில் வசிக்கும், திருமணமாகாத இளம் பெண்கள் நடமாட்டத்தை
நோட்டமிடுவானாம். அவர்களிடம் தனது படிப்பு உள்ளிட்ட விவரங்களை சொல்லி காதல்
வலையில் விழ வைப்பானாம்.
திருமண ஆசை காட்டி, அந்த பெண்களை லாட்ஜுக்கு அழைத்துச் சென்று உல்லாசம்
அனுபவித்துள்ளான். அதை மொபைல் போனில் வீடியோ எடுப்பேன். அதை காட்டியே, நகை,
பணம் பறித்துள்ளான். பிறகு அந்த இளம் பெண்களை மிரட்டி அவர்களின்
தோழிகளையும் வலைக்குள் கொண்டுவந்து அனுபவித்துள்ளான்.
கத்தி முனையில் பலாத்காரம்
கத்தி முனையில் பலாத்காரம்
மேலும் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை நோட்டமிடும் அறிவழகன்,
பட்டப்பகலில், யாருமில்லாத நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்து, அந்த
பெண்களின் கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணத்தை கொள்ளையடிப்பானாம்.
பெண்கள் அழகாக இருந்தால் கத்தியை காட்டி மிரட்டியே அங்கு வைத்தே அவர்களை
பலாத்காரமும் செய்துவந்துள்ளான்.
திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்கள்
இப்படி அறிவழகனால் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
அதில்
பெரும்பாலானோர் போலீசாருக்கு சொல்லாமல் மறைத்துவிட்டதால் அது அறிவழகனுக்கு
வசதியாக போயுள்ளது.
சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்களை கத்தி முனையில் அறிவழகன் பலாத்காரம்
செய்துள்ளான். இதுகுறித்து தெரியவந்துள்ள நிலையில் அந்த பெண்களிடம்
வாக்குமூலம் வாங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். சென்னையில், 1980களில்,
அகரம் நாராயணன் என்ற காமக்கொடூரன் இதுபோல வீட்டில் தனியாக இருந்த பெண்களை
கத்தி முனையில் பலாத்காரம் செய்தான், பிறகு அவன் கொலை செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.
://tamil.oneindia.com/
://tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக