சனி, 18 நவம்பர், 2017

ஷாலின் : நாச்சியார் வாயிலிருந்து 'தேவிடியா பயல்கள்' ... சமூகநீதியை விலைபேசுவது....


Shalin maria lawrence : ஜோதிகா அந்த வார்த்தையை உபயோக படுத்தியது சரியா தவறா என்கிற விவாதம் அவசியமற்றது .
இங்கு விவாதிக்கப்பட வேண்டியது வேறு ஒரு முக்கிய விஷயம் .
ஆயிரம்தான் 'தேவரடியால் ' 'தேவருக்கு அடியாள் ' 'கோயில் நடன மங்கைகள் ' என்று நாம் சப்பை கட்டு கட்டினாலும் 'தேவடியா பயல்கள் ' என்கிற வார்த்தை ஒடுக்கப்பட்ட மக்களை குறிப்பிட ஆதிக்க சாதியினரால் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தபட்டு வரும் ஒரு சமூக இழிவுச்சொல் .
வர்ணாசிரமதின்படி சூத்திரர்கள் என்ற பாகுபாடிற்கு அர்த்தமாக விளங்கிய அந்த வார்த்தையை சூத்திரர்களே மற்ற ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக உபயோகப்படுத்த ஆரம்பித்தனர் .
பற தே......பயலுகளா என்கிற வார்த்தையைதான் திரு பாலா அவர்கள் இந்த படத்தில் கத்தரித்து சாதுரியமாக புகுத்தி இருக்கிறார் .

இதை நான் எப்படி தெளிவாக சொல்லுகிறேன் என்றால் பாலா தன் படங்களில் ஆதிக்க ஜாதி சிந்தனையை மறக்காமல் புகுத்தும் திறமையுள்ளவர் .
அதேபோல் இவரின் இயக்க திறமையால் மாட்டிறைச்சிக்கெதிரான ஒரு படத்தையும் , கிறிஸ்தவ மிஷினரிகள் பற்றி பொய்யான விஷயங்களை அடங்கிய படத்தை எடுத்த வல்லவர் .
நாச்சியார் என்கிற பெயர் ஒரூ ஜாதி பெயர் .
அந்த நாச்சியார் வாயிலிருந்து 'தேவிடியா பயல்கள்' என்கிற வார்த்தை வருவது எனக்கு உறுத்துகிறது .
ஒருவரின் திறமைக்கான அங்கீகாரம் முக்கியம் ஆனால் அதற்கு சமூகநீதியை விலைபேசுவது மானுட துரோகம்.
ஷாலின்

கருத்துகள் இல்லை: