நக்கீரன் :சென்னை
கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் கலைஞரை எம்.எல்.ஏக்கள் தமிமுன்
அன்சாரி, தனியரசு, கருணாஸ் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.தி.மு.க.
தலைவர் கலைஞர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில்
ஒய்வெடுத்த வருகிறார். அவரை பல்வேறு அரசி்யல் கட்சி தலைவர்களும் சந்தித்து
உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்
பிரதமர் நரேந்திர மோடியும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில்
அ.தி.மு.க. கூட்டணி எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, கருணாஸ்
ஆகியோர் இன்று இரவு 8 மணி அளவில் கோபாலபுரம் சென்று கலைஞரை நேரில்
சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக