நக்கீரன் :பிரதமர் மோடி - கலைஞர் சந்திப்பு திமுக ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது குறித்து திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு ஆகியவற்றை மக்கள் புரிந்து கொண்டு வரவேற்பு அளித்துள்ளனர். பாமர மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் வரி குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் ஜிஎஸ்டியின் தேவையை, அனைத்து வியாபார மக்களும், சிறு குறு தொழில் செய்வோரும் உணர்ந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும் என நம்புகிறேன்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. சுய அதிகாரம் படைத்த அமைப்பு நடத்தும் சோதனையை அரசியலாக்க வேண்டாம். மற்ற மாநிலங்களிலும் வருமான வரி சோதனை நடந்துள்ளது. வருமான வரித்துறை கட்சி பாகுபாட்டுடன் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கூறுவதில் உண்மை இல்லை. பிரதமர் மோடி - கலைஞர் சந்திப்பு திமுக ஒட்டுண்ணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக