Raj
P - Oneindia Tamil
: காப்பாற்றுகிறேன் என வாக்குறுதி தந்தது என்னாச்சு?..வீடியோ
பெங்களூரு: டெல்லியோடு இணக்கமாக இருப்பதாக சிக்னல் கொடுத்தும்
சாம்ராஜ்யத்தையே சிதைத்துவிட்டதில் ரொம்பவே சீறிக் கொண்டிருக்கிறாராம்
சிறைப்பறவை சசிகலா. இப்போது டெல்லியுடன் இணக்கமாக போங்கள் என அறிவுறுத்திய
தூதருக்கு சிறையில் வந்து சந்திக்க ஓலை அனுப்பியிருக்கிறாராம் 'சின்னம்மா'.
சென்னை முதல் மன்னை வரை வெலவெலத்துக் கிடக்கிறது சசிகலா சர்க்கார்.
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தால் அப்பட்டமாக தனி அரசாங்கமே நடத்துவது;
ஜெயலலிதா ஆட்சியில் இல்லாதபோது குட்டி சமஸ்தானத்தை தங்களது உறவுகளைக்
கொண்டு நடத்துவதுதான் சசிகலா ஸ்டைல்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிகாரப்பூர்வ
மகாராணியாகப் போகிற மமதையில் வலம் வந்தார் சசிகலா.
காலம் அவருக்கு
காராக்கிரத்துக்குத்தான் அனுப்பி வைத்திருக்கிறது. தமது சாம்ராஜ்யத்தின்
இளைய பட்டமாக தினகரனை நிறுத்த முயற்சித்தார்கள்.
அவரை டெல்லி திஹார் சிறைதான் வரவேற்றது. ஏமாற்றங்கள்தான் மிச்சம் ஏமாற்றங்கள்தான் மிச்சம் எப்பவும்போல் பினாமிகளைக் கொண்டு ஆட்சி நடத்த எத்தனித்த சசிகலா உறவுகளுக்கு எதிர்பாராத ஏமாற்றங்கள். இதன் உச்சமாக இப்போது ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தை சீட்டு கட்டுபோல சரித்துப் போட்டு வைத்திருக்கிறது
அவரை டெல்லி திஹார் சிறைதான் வரவேற்றது. ஏமாற்றங்கள்தான் மிச்சம் ஏமாற்றங்கள்தான் மிச்சம் எப்பவும்போல் பினாமிகளைக் கொண்டு ஆட்சி நடத்த எத்தனித்த சசிகலா உறவுகளுக்கு எதிர்பாராத ஏமாற்றங்கள். இதன் உச்சமாக இப்போது ஒட்டுமொத்த சாம்ராஜ்யத்தை சீட்டு கட்டுபோல சரித்துப் போட்டு வைத்திருக்கிறது
இந்தியா இதுவரை கண்டிராத
மாபெரும் வருமான வரி சோதனை.
தூக்கத்தை காவு கொடுத்த உறவுகள்
தூக்கத்தை காவு கொடுத்த உறவுகள்
இதனால் சென்னை தொடங்கி மன்னார்குடி வரையிலான இந்த மாபெரும் கோஷ்டியின்
300க்கும் மேற்பட்ட மந்திரி பிரதானிகள் தூக்கத்தைத்
தொலைத்தவர்களாகிவிட்டனர். பெங்களூரு சிறையில் எத்தனை தடைபோட்டாலும்
சீமாட்டி நினைப்பில் வலம் வரும் சசிகலா இவ்வளவு பெரிய தாக்குதலை சற்றும்
எதிர்பார்க்காமல் உளைச்சலுக்குள்ளாகிப் போனார்.
செல்கள் மவுனித்தன
செல்கள் மவுனித்தன
டெல்லியுடன் நெருக்கமாக இருந்துவிடுங்கள்... எதுவும் வராமல் பார்த்துக்
கொள்ளலாம் சின்னம்மா..என வாக்குறுதி கொடுத்த தூதரின் நினைவுதான் சட்டென
சசிகலாவுக்கு வந்ததாம்... கொடுத்த உறுதிமொழி என்னாச்சு எனக் கேட்டு
சொல்லுங்கள் என சிறைராணி உத்தரவிட்டபோதும் தூதர் செல்கள் மவுனித்துப்
போயினவாம்.
பதற்றத்தில் தூதர்
பதற்றத்தில் தூதர்
அவ்வளவுதான்.. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாராம்... என்னை உடனே சிறைக்கு
வந்து பார்த்துதான் ஆக வேண்டும்... இல்லையெனில்... என ஏதோ ஒரு தொனியில்
மிரட்டல் விடுத்ததை அப்படியே தூதர் பெருமகனுக்கு சொல்லி
அனுப்பியிருக்கிறார்கள் அடிப்பொடிகள்.
பம்மிக் கொண்டிருக்கிற தூதர்
பெருந்தகை பெரும்பதற்றத்துடன் பெங்களூருக்கு சிறைக்குப் போய் பேசுவதற்கான
ஒத்திகையை பார்த்து கொண்டிருக்கிறாராம்.
/tamil.oneindia.com/
/tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக