மின்னம்பலம் :அனைத்துத்
தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக்களை
ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்
வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தஞ்சாவூரில் வரும் 29ம் தேதி நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கான வாகன நிறுத்தம் அமைப்பதற்காக அங்குள்ள மன்னர் சரபோஜி கல்லூரியின் விளையாட்டுத் திடல் சீரழிக்கப்படுகிறது. ஆட்சியாளர்களின் புகழ்பாடுவதற்காக நடத்தப்படவிருக்கும் அரைக்காசுக்குக் கூடப் பயனற்ற விழாவுக்காக அரசுக்கல்லூரியின் விளையாட்டுத் திடலை சீரழிப்பதா எனக் கண்டித்துள்ளார்.
விளையாட்டுத்திடலில் குறுக்கும் நெடுக்குமாக சாலைகள் அமைக்கப்பட்டிருப்பதுடன், அதன் பெரும்பகுதி கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிந்த பின்னர், லட்சக்கணக்கில் செலவு செய்தாலும் கூட மன்னர் சரபோஜி கல்லூரியின் விளையாட்டுத் திடலை அதன் பழைய பொலிவுக்குக் கொண்டு வருவது சாத்திய மற்றது என வேதனை தெரிவித்துள்ளார்.
விளையாடுத்திடல் சேதப்படுத்தப்படுவதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினாலும், அதைக் கண்டு கொள்ளாமல் திடலில் வாகன நிறுத்துமிடம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 23 மாவட்டங்களில் நடைபெற்றுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு இவ்விழாக்களால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படவில்லை எனவும் மாறாக, ஏராளமான பாதிப்புகள் தான் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
”அனைத்து மாவட்டங்களிலும் நடை பெற்ற விழாக்களுக்குப் பள்ளி மாணவர்கள் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி நிர்வாகங்களை மிரட்டி அவற்றின் வாகனங்களைக் கட்டாயப்படுத்தி வாங்கி, பொதுமக்களை அழைத்து வரப் பயன்படுத்தினார்கள். உயிருடன் உள்ள தலைவர்களின் படத்துடன் கட்-அவுட்டுகள், பதாகைகள் வைக்கக்கூடாது என்று உயர்நீதி மன்றம் பிறபித்த ஆணையை மீறி திருச்சி மாநாட்டிற்காக ஆயிரக்கணக்கான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டன. இப்படி சட்டத்தையும் மதிக்காமல், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் மதிக்காமல் தமிழக அரசு செயல்படுகிறது “ என ராமதாஸ் கூறியுள்ளார்.
எனவே, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காகச் சீரழிக்கப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி விளையாட்டுத் திடலை உடனடியாக சீரமைத்துத் தர வேண்டும் என்பதோடு , அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களை ரத்து செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக