thetimestamil.com :வினோத் மலைச்சாமி
தீயணைப்பு துறை அதிகாரி : உங்க பொண்ணு என்ன ஜட்டி மா போட்டு இருக்கு<
மதிவதனி (கலெக்டர் ) : ஏன் ?
தீயணைப்பு துறை அதிகாரி: இல்ல மேடம் quality ஆன ஜட்டினா,கம்பிய ஜட்டியில் குத்து குழந்தைய மேல துக்கிடலாம்
குழந்தையின் தாய்: ஐயா …வேண்டாம் யா…10 க்கு 3ன்னு வாங்குன ஐட்டி யா….
என்று கத்தி அழும் தாயின் கண்ணீர் நம் கண் வழியாக வழிந்து விடுகிறது.
நிலத்தடி நீர் வற்றிப்போன திருவள்ளுவர் மாவட்டத்தில் நீருக்கு என்று ஒரு பெரும் தினக்கூலி கூட்டம் அலைந்து கொண்டிருக்கிறது.
அந்த தினக்கூலிகளின் அன்றாட வாழ்வாதாரம் அருகில் இருக்கும் கடலில் சிப்பி பொறுக்குவதும், உழவு நிலமாக இருந்த இடத்தை பிளாட் போட்டு விற்பதற்காக
அங்கே ஊன்றியிருக்கும் பிளாட் கல்லிற்கு கலர் பெயிண்டு அடிப்பதும்தான்.
மரபு ரீதியாகவே யாருக்குமே தொந்தரவு தராது வாழ்ந்து வந்த விவசாய கூலிகள், ஒரு நாள் ஆத்திரம் கொண்டு வீதியில் இறங்க, அந்த வழியாக வருகிறார் மாவட்ட ஆட்சியாளர் மதிவதனி.
பானை சோற்றில் நஞ்சு கலப்படம் இல்லா ஒற்றை சோற்றுப் பருக்காக மதிவதனி. கொதித்த உளையாக இருக்கும் மக்களை எதிர்க்கொள்ளும்போது காந்தியாக மாற்றம் கொண்டு உங்களுக்கு குடிக்க நல்ல நீர் கிடைக்காத வரை நான் நீர் குடிக்க போவது இல்லை என்று சொல்லிச் செல்கிறார்.
மற்றொரு கிராமத்தின் கருவேலமரம் காட்டில் ஊர் மக்கள் ஒன்று கூடியிருக்கிறார்கள்.
சுயஉதவி குழு தலைவி அலைப்பேசி வழியாக ஏலம் நடத்துகிறார். அடிக்கடி தன் பார்வையில் இருந்து தவறி போகும் குழந்தை, இந்த முறையும் தவறி போக குழந்தையை தேட ஆரம்பிக்கிறாள் அந்தத் தாய்.
ஓடுகிறாள், ஓடுகிறாள் மிகப்பெரிய பரந்துபட்ட விவசாய நிலத்தில் பறவை போல அழுகை குரல் எடுத்து அந்தப் பெண் ஓடுகிறாள். மாண்டேஜ் காட்சியாக பறவைகளின் பறந்து போகும் நிழல் உழவு நிலத்தில் படருகிறது.
தேடிய மகள் நிலத்தடி நீரை எடுக்க தோண்டிய ஆழ்குழாய் கிணறுகளில் தரையில் இருந்து முதல் பாதி 36 அடி ஆழத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறாள். அங்கே ஒட்டுமொத்த கிராம மக்களும் ஒன்று கூட, பரபரப்பு நிலை நம்மை பற்றிக்கொள்கிறது.
அறத்தை உருவாக்கியவர்கள்…
ஓம் பிரகாஸின் திறம்பட ஒளிப்பதிவு Exterior காட்சிகளை உடலும் சதையுமாக ஒட்டி இருக்கும் உணர்வாக பிரமிக்க வைக்கிறது. ஆகவே மேக்கிங் பக்கம் அசுர களம் கண்டவராக நிற்கின்றார் கோபி நயினார். ரூபன் படத்தொகுப்பு உலை கொதிக்க தொடங்கி முடியும் வரை நம்மை நாற்காலியில் கட்டி வைத்திருக்கிறது. லால்குடி இளையராஜாவின் கலைநயம் படம் நெடுக இட்டு செல்லும் குறியீடுகள் நமக்கு அறக்கல்வியை நினைவுபடுத்துகிறது . ஆழ்துளை கிணறு வடிவாக்கம் தொடங்கி அதை ஒட்டிய கூடாரம், அதில் இருக்கும் கருவிகள் என்று எதார்த்ததில் இருந்து பிரமாண்ட இடம் நோக்கி எடுத்துச் சென்றிருக்கிறது.
இப்படிப் பட்ட படத்தில் இந்தக் காட்சிகள் வரும் என்று ஒரு அனுமானம் இருக்கும். ஆனால் ஜீப்ரான் நம் அனுமானத்தை மடைமாற்ற பெரும் உதவி இருக்கிறார். பாடல்களை சரியாக pitch செய்து இருக்கிறார் கதை களம் மாறாமல். மேலும் “அறம்” திரைப்படம் பார்த்த ஒருவருக்கு இதில் இருந்து விலகிச் செல்ல ஒரு மாத காலம் ஆகலாம். காரணம் ஜீப்ரான் என்ற இசை இயக்குனர்!
இயக்குனர் கோபி நயினாருக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இயக்குனர்கள் கதை களத்தை தங்களின் வீடுகளுக்கு கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை களத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே, அதாவது ஒரு இயக்குனர் நேரடியான (நிகழ்வு நடந்த) கதை களம் நோக்கி சென்றால் தான் அந்த இடத்தின் Warm conditionயை புரிந்துகொள்ள முடியும். அவற்றை போல் நிகழ்காலத்தில் நடக்கும் அனைத்து மனித மண்புக்கு எதிரான இழிவையும் ஒரு நல்ல களப்பணியாளர் மட்டுமே அதை காட்சி வடிவாக்கம் செய்ய முடியும். இதை visual insight implementation என்று கூற வேண்டும். அவ்வளவு எளிதாக இதை முதல் படத்தில் கையாள்வது மிக சிரமம். வசனம் எந்த ஏற்ற, இறக்கம் இல்லாமல் மகவும் துல்லியமாக broader ideology என்று சொல்லப்படும் அம்பேத்கரிய , மாக்ஸிய கோட்பாடுகளில் இருந்து எழுதப்பட்டு இருக்கிறது. வரும்கால இயக்குனர்களுக்கு ஒரு நல்ல பாதையை காண்பித்து இருக்கிறார் இயக்குனர். முதல் படத்தில் வென்றும் காண்பித்து விட்டார்.
அறம் பொழிந்தோர்
நயன்தாரா கதையை மிகவும் உறுதியான அழகோடு நகர்த்தி செல்கிறார். கோபி நயினாரின் தனது ஆன்மாவில் இருந்து மதிவதனி என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நயன் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால் ஸ்டைல் நடைகளை சற்று குறைத்து இருக்கலாம்.அது மட்டுமே கதையோடு ஒட்டாத செயற்கையாக இருந்தது.
ஆழ்துளைகுழாய் கிணற்றில் விழும் குழந்தையின் குடும்பமும் அந்தக் குடும்ப கதாப்பாத்திரமும் மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. விளிம்பு நிலை மக்களின் கோபம், அழுகை, பாதுகாப்பு இன்மை , போர் குணம், அரச பயங்கரவாதம், அரச கட்டமைப்பின் தோல்வி என உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு திரைக்களமும் அதற்கு ஈடு தந்த நடிகர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.
ஒட்டுமொத்தத்தில் அரசியல், அதிகாரம் , அரசு நிர்வாக கட்டமைப்பு என்ற மக்கள் ஜனநாயகத்தில் சிரடுகளாய் வேர் பதித்திருக்கும் அராஜகத்திற்கு So called power politics structure யை குறிவைத்து இருக்கிறது இந்தப் படம்.
படம் முடிந்த போது தியேட்டரில் ஒருவர் கூறினார்… “நாம எல்லாம் சேர்ந்து அந்த படத்தை கைக் கொடுத்து துக்குனா இந்தப் படம் எங்கியோ போய்டும்” என்று. அறத்திற்கும் அறம் சேர்க்க கை கொடுப்போம்.
வினோத் மலைச்சாமி, குறும்பட இயக்குநர், நடிகர்.

- ஒரு கலைஞன் உங்களை சிரிக்க வைக்க நேரம் ஒதுக்குவான், ரசிக்க வைக்க நேரம் ஒதுக்குவான், பொங்கி அழவும் நேரம் ஒதுக்குவான். படத்தின் இயக்குனர் கோபி நயினாரின் அடுத்த திரை நகர்வுக்காக. அதுவரை கண்கலங்கி நிற்காத யாருமே கண்ணீர் விட்டு ஒரு நிகழ்வுக்காக அழுது தீர்த்து விட்டால் நீங்கள் புதிய மனிதனாக மாற்றம் கண்டு பழமையான மனிதரிடம் இருந்து வெளியே வந்து விட்டதாக பௌத்த நெறி கூறுகிறது.
அறத்தை உருவாக்கியவர்கள்…
ஓம் பிரகாஸின் திறம்பட ஒளிப்பதிவு Exterior காட்சிகளை உடலும் சதையுமாக ஒட்டி இருக்கும் உணர்வாக பிரமிக்க வைக்கிறது. ஆகவே மேக்கிங் பக்கம் அசுர களம் கண்டவராக நிற்கின்றார் கோபி நயினார். ரூபன் படத்தொகுப்பு உலை கொதிக்க தொடங்கி முடியும் வரை நம்மை நாற்காலியில் கட்டி வைத்திருக்கிறது. லால்குடி இளையராஜாவின் கலைநயம் படம் நெடுக இட்டு செல்லும் குறியீடுகள் நமக்கு அறக்கல்வியை நினைவுபடுத்துகிறது . ஆழ்துளை கிணறு வடிவாக்கம் தொடங்கி அதை ஒட்டிய கூடாரம், அதில் இருக்கும் கருவிகள் என்று எதார்த்ததில் இருந்து பிரமாண்ட இடம் நோக்கி எடுத்துச் சென்றிருக்கிறது.
இப்படிப் பட்ட படத்தில் இந்தக் காட்சிகள் வரும் என்று ஒரு அனுமானம் இருக்கும். ஆனால் ஜீப்ரான் நம் அனுமானத்தை மடைமாற்ற பெரும் உதவி இருக்கிறார். பாடல்களை சரியாக pitch செய்து இருக்கிறார் கதை களம் மாறாமல். மேலும் “அறம்” திரைப்படம் பார்த்த ஒருவருக்கு இதில் இருந்து விலகிச் செல்ல ஒரு மாத காலம் ஆகலாம். காரணம் ஜீப்ரான் என்ற இசை இயக்குனர்!
இயக்குனர் கோபி நயினாருக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. இயக்குனர்கள் கதை களத்தை தங்களின் வீடுகளுக்கு கொண்டு வந்து விடுவார்கள். ஆனால் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை களத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே, அதாவது ஒரு இயக்குனர் நேரடியான (நிகழ்வு நடந்த) கதை களம் நோக்கி சென்றால் தான் அந்த இடத்தின் Warm conditionயை புரிந்துகொள்ள முடியும். அவற்றை போல் நிகழ்காலத்தில் நடக்கும் அனைத்து மனித மண்புக்கு எதிரான இழிவையும் ஒரு நல்ல களப்பணியாளர் மட்டுமே அதை காட்சி வடிவாக்கம் செய்ய முடியும். இதை visual insight implementation என்று கூற வேண்டும். அவ்வளவு எளிதாக இதை முதல் படத்தில் கையாள்வது மிக சிரமம். வசனம் எந்த ஏற்ற, இறக்கம் இல்லாமல் மகவும் துல்லியமாக broader ideology என்று சொல்லப்படும் அம்பேத்கரிய , மாக்ஸிய கோட்பாடுகளில் இருந்து எழுதப்பட்டு இருக்கிறது. வரும்கால இயக்குனர்களுக்கு ஒரு நல்ல பாதையை காண்பித்து இருக்கிறார் இயக்குனர். முதல் படத்தில் வென்றும் காண்பித்து விட்டார்.
அறம் பொழிந்தோர்
நயன்தாரா கதையை மிகவும் உறுதியான அழகோடு நகர்த்தி செல்கிறார். கோபி நயினாரின் தனது ஆன்மாவில் இருந்து மதிவதனி என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்கி இருக்கிறார். அதில் நயன் சிறப்பாக நடித்து இருக்கிறார். ஆனால் ஸ்டைல் நடைகளை சற்று குறைத்து இருக்கலாம்.அது மட்டுமே கதையோடு ஒட்டாத செயற்கையாக இருந்தது.
ஆழ்துளைகுழாய் கிணற்றில் விழும் குழந்தையின் குடும்பமும் அந்தக் குடும்ப கதாப்பாத்திரமும் மிகவும் கச்சிதமாக பொருந்தி இருக்கிறது. விளிம்பு நிலை மக்களின் கோபம், அழுகை, பாதுகாப்பு இன்மை , போர் குணம், அரச பயங்கரவாதம், அரச கட்டமைப்பின் தோல்வி என உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு ஒரு திரைக்களமும் அதற்கு ஈடு தந்த நடிகர்களையும் பாராட்டியே ஆக வேண்டும்.
ஒட்டுமொத்தத்தில் அரசியல், அதிகாரம் , அரசு நிர்வாக கட்டமைப்பு என்ற மக்கள் ஜனநாயகத்தில் சிரடுகளாய் வேர் பதித்திருக்கும் அராஜகத்திற்கு So called power politics structure யை குறிவைத்து இருக்கிறது இந்தப் படம்.
படம் முடிந்த போது தியேட்டரில் ஒருவர் கூறினார்… “நாம எல்லாம் சேர்ந்து அந்த படத்தை கைக் கொடுத்து துக்குனா இந்தப் படம் எங்கியோ போய்டும்” என்று. அறத்திற்கும் அறம் சேர்க்க கை கொடுப்போம்.
வினோத் மலைச்சாமி, குறும்பட இயக்குநர், நடிகர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக