வெள்ளி, 20 ஜனவரி, 2017

மாணவச் சமூகமே, பிடிஇறுகட்டும், டெல்லியின் கொம்பை பிடிவிடாதே

டெல்லிக்கு எதிராக தமிழகம் எழுந்தது ! விடாதே ! தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு ! டெல்லியை அடக்கினால் அச்சப்படும் அடங்கிப்போனால் நம்மை விரட்டும் ! தமிழகத்தின் மாணவச் சமூகமே, பிடி இருகட்டும், டெல்லியின் கொம்பை பிடி விடாதே இம்முறை மோடியின் பொய், பித்தலாட்டத்திற்கு ஏமாறக்கூடாது. 
சென்னை மெரினா முதல் தென்குமரி வரை காளையில் பற்றியத் தீகாட்டுத்தீயாக தமிழகத்தின் உரிமைக்காக டெல்லியைப் பொசுக்கட்டும். சிறைபட்டது காளை மட்டுமல்ல, காவிரி மட்டுமல்ல, கல்வி உரிமை மட்டுமல்ல, தமிழர் பண்பாடு மட்டுமல்ல மொத்த தமிழினமும்தான். டெல்லி ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுக்கும் உரிமைப் போராட்டத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும்.
7 கோடி மக்களின் பிரதிநிதிகளான தமிழக எம்.பி.க்களை பிரதமர் சந்திக்க மறுக்கிறார். காவிரியை தடுத்த மோடியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் மரணம், செய்யாத குற்றத்திற்கு டெல்டா விவசாயமே தூக்கில் தொங்க விடப்பட்டுள்ளது. எந்த சட்டமும் இல்லாமல் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒரே இரவில் செல்லாது என 100 கோடி மக்களை நடுத்தெருவில் நிறுத்திய மோடியால், ஜல்லிகட்டு நடத்த முடியாதா? செத்துப்போன மொழியான சமஸ்கிருதத் திணிப்பு பள்ளிகளில் சி.பி.எஸ்இ. பாடத்திட்டம் திணிப்பு: தமிழக மாணவர்களை நடுத்தெருவில் நிறுத்த நீட்தேர்வு.

  • திராவிடத்தை அழிப்பேன் என சூளுரை. பெரியார் சிலை இடிப்பு. தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க மீத்தேன், ஷேல்கேஸ், நியூட்ரினோ, கூடங்குளம் அணு உலை போன்ற அழிவுத்திட்டங்களை கொண்டு வந்து தமிழகத்தில் குவிப்பது எதிர்த்துப் போராடினால் தேசத்துரோக வழக்கு. டெல்லி கோர்ட்டில் ரவுடித்தனம் செய்த பாஜக வக்கீல் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால், ஊழலுக்கு எதிராகப் போராடிய தமிழக வழக்கறிஞர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கிறது டெல்லி உயர்நீதிமன்றங்களில் தமிழ் வழக்காடு மொழி என போராடியதற்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டும் மத்திய பாதுகாப்பு படை.
  • இல்லாத சரஸ்வதி நதியை தேட 100 கோடி ஒதுக்கிய மோடி அரசு, உலக வரலாற்றை திருப்பிப்போடும் – தமிழர்களின் தொண்மையை நிருபிக்கும் கீழடி அகழ்வாராய்ச்சியை தடுக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி பாபர் மசூதியை இடித்தார்கள் கடலுக்கடியில் ராமர் பாலம் என்று கூறி சேதுகால்வாய் திட்டத்திற்கு தடைவிதித்தார்கள். தமிழர்கள் போராடினால் ஆட்சியைகலைப்பேன் என அச்சுறுத்துகிறார்கள்.
  • சொந்த பந்தங்களோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய பொங்கல் நாள் போர்க்களமாக மாற்றியது அதிகார வர்க்கத் திமிரின் உச்சக்கட்டம். நம் ஊரில் வந்து நம்மாட்டை விடாதே என வாடிவாசலை மறித்து அடிப்பதும் கைது செய்வதும், கணக்கெடுப்பதும், மிரட்டுவதும் – என்ன நடக்கிறது? தமிழகத்தில் பிஜேபி. ஆட்சியா அல்லது அடிமைகளின் ஆட்சியா?
  • உச்சநீதிமன்ற உத்திரவுகளை தினம்தோறும் மீறுவது இந்த ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ் அதிகாரிகள்தான். தீர்ப்புகளை குப்பைக் காகிதமாக கருதுவது மத்திய – மாநில அரசுகள்தான். காலம் காலமாக ஜல்லிகட்டு நடத்தும் மக்களை பார்த்து கட்டப்பஞ்சாயத்து நீதிமன்ற உத்திரவிற்கு கட்டுப்படு என சொல்லும் தகுதி, அருகதை இவர்களுக்கு கிடையாது. வாழ்வுரிமைகளை நசுக்கி, வாழ்வாதாரங்களை அழித்து தமிழர்களை மிதிக்கும் டெல்லியின் காலை முறிக்காமல் விடக்கூடாது.  வினவு
  • கருத்துகள் இல்லை: