புதன், 18 ஜனவரி, 2017

தயாநிதி அழகிரி :தமிழன் என்ற உணர்வோடு வந்திருக்கிறோம் தயவு செய்து அரசியல் சாயம் பூசாதீர்கள்!தயவு செய்து இந்த ஜல்லிகட்டு போராட்டத்துக்கு அரசியல் கட்சி சாயம் பூசாதீர்கள். எமது உணர்வுகளை கொச்சை படுத்தி விடவேண்டாம் .இது வெறும் ஜல்லிகட்டு போராட்டம் என்று நினைக்காதீர்கள். வெறும் மாட்டைபத்தின பிரச்சனை என்று நினைக்காதீங்க இது நம்ம நாட்டை பற்றிய பிரச்சனை. ஆந்திராவில் ஜல்லிகட்டு நடக்கிறதுதானே? அப்படி இங்க நடத்த முடியாதா? அரசே மீறி அனுமதி கொடுத்தால்தானே நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு வரும்? ஜல்லிக்கட்டு நடக்கட்டும் .. வேண்டும் என்றால் நூறு பேரை  கைது செய்யுங்கள் . வழக்குகளை நாங்கள் பார்த்துகொள்கிறோம். இப்போ இங்கே இருப்பது இருபது முப்பது வீதம்தான் .இப்படியே இழுத்து கொண்டு போனால் மொத்த தமிழகமும் குதித்துவிடும்.
இன்னும் ஏராளமானோர் போராட்டத்துக்கு வர தயாராகி கொண்டு இருக்கிறார்கள். மக்கள் மட்டுமல்ல போலீஸ்காரர்களும் மூன்று நாளாக சாப்பாடு தண்ணீர் இல்லாம இருக்காங்க.மக்களையும் போலீசையும் அரசுதான் காப்பாற்ற வேண்டும்.  அரசே ஆணை பிறப்பித்தால் தான் கண்டம் ஆப் கோர்ட்டு . பேசாம நாங்களே நடத்திக்கிறோம் எங்களை கைது பண்ணு . கேசை நாங்களே பாத்துகிறோம்  நக்கீரன்

கருத்துகள் இல்லை: