வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஜல்லிகட்டுக்கு அவசர சட்டம் ... பன்னீர்செல்வம் வாக்குறுதி! போராட்டத்தை கைவிடவேண்டுமாம்! எப்படீ?

ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும்: டெல்லியில் ஓ.பி.எஸ். பேட்டி டெல்லியில் தமிழக முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறபிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும் என்றார். பன்னீர் செல்வம் கூறியதாவது, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமிழக அரசு சட்ட ரீதியாக எடுக்கும் நடவடிக்கைக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். இதையடுத்து டெல்லியில் தங்கி சட்ட வல்லுநர்களுடன் விவாதித்தேன். அதன் அடிப்படையில் மத்திய அரசின் மிருகவதை தடுப்பு சட்டத்திற்கு மாநில அரசு திருத்தம் ஒன்றை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.  முதல்ல  ராவோடு  ராவா  சட்டத்தை கொண்டுவாங்க.. .ராவோடு  ராவாக பதவி பிரமாணம் செய்ய தெரியுதில்ல?
இந்த சட்டத்திருத்தத்தினை ஒரு அவசர சட்டமாக பிறப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது. இந்திய அரசிலமைப்பு சட்டத்தின்படி இந்த அவசர சட்டம் மத்திய அரசின் உள்துறைக்கு அனுப்பப்பட்டு, மத்திய அரசின் பரிந்துரை, ஜனாதிபதிக்கு அனுப்பப்பட வேண்டும். ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து அதன் அடிப்படையில் மாநில ஆளுநர் அவசர சட்டம் பிறப்பிக்க இயலும். இந்த அவசர சட்டம் புதுடெல்லியில் இருந்தபடியே தயார் செய்யப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இன்று காலை தமிழக அரசின் அதிகாரிகள் மூலம் அனுப்பி வைத்துள்ளேன். மத்திய அரசு இதற்கான தொடர் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் இங்கிருந்து அந்த பணியை பணிப்பதற்காக பணித்துள்ளேன். ஜனாதிபதி, ஆளுநர் ஆகியோரின் உத்தரவு பெறப்பட்டு, இந்த அவசர சட்டம் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும். எனவே தமிழகத்தில் ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் போராட்டத்த கைவிட வேண்டும் என்றார்.   நக்கீரன்

கருத்துகள் இல்லை: