வெள்ளி, 20 ஜனவரி, 2017

ஸ்டாலின் கனிமொழி கைது ... ரயில் மறியல் போராட்டதில் திமுக ..

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயி்ல மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், ராஜ்யசபா எம்.பி., கனிமொழி மற்றும் தி.முக..,வினர் கைது செய்யப்பட்டனர். திமுக போராட்டம்: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று கடையடைப்பு போராட்டம், தனியார் பள்ளிகள் விடுமுறை, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் என ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். உறுதுணை: இதன்படி சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தில் ஸ்டாலின் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் தி.மு.க.,வினர் பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்ட கனிமொழி கைது செய்யப்பட்டார். ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு தி.மு.க., உறுதுணையாக இருக்கும் என அவர் கூறினார். தமிழகத்தின் பல இடங்களில் ஏராளமான தி.மு.க.,வினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தினமால்ர்

கருத்துகள் இல்லை: