வியாழன், 19 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டு..கர்நாடகத்தில் போராட்டத்தில் குதித்த கன்னட தமிழ் மக்கள்

ஜல்லிக்கட்டு, ஜல்லிக்கட்டு இந்த வாசகத்திற்கு இன்று உலக தமிழர்கள் ஒன்று இணைந்துள்ளார்கள் என்பது உண்மை.
ஜல்லிக்கட்டை பற்றி தெரியாத நாடுகளில் கூட இன்று ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, லண்டன், மலேசியா உட்பட பல உலக நாடுமுழுவதும் போராட்டத்தில் குதித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்படும் கர்நாடகாவில், இன்று தமிழர்களுக்கு ஆதரவாக, பெங்களூரு டவுண் ஹால் முன்பு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் என வலைதளங்களில் தகவல் வெளியானது.
யார் அந்த தகவல் முதலில் வெளியிட்டார் என்று தெரியவில்லை. ஆனால் தகவல் வைரலாக பரவியது.
சரியாக மாலை நான்கு மணிக்கு 25 நபர்கள் மட்டும் டவுன் ஹால் முன்பு வந்தனர். போலீஸார் அனுமதி வாங்கவில்லை, போலீஸாரிடம் நாங்கள் ஜல்லிக்கட்டிற்காக போராட்டம் நடத்த வந்துள்ளளோம் என்று சொன்னதும், கன்னடபோலீஸார் முடியாது என்று சொல்லாமல் நாங்களும் ஆதரவு தருகிறோம் நடத்துங்கள் என கூறியுள்ளனர்.

25 பேருடன் துவங்கிய ஆர்ப்பாட்டத்தில் ஒரு மணிநேரத்தில்  ஆயிரம் இளைஞர்கள் சேர்ந்தனர். பெங்களூருவிலுள்ள ஐ.டி., கம்பெனியில் பணியாற்றும் ஊழியர்கள், கர்நாடகா தமிழ் அமைப்பினர், சில கட்சி தலைவர்கள், சில நடிகர் சங்க ரசிகர்கள், பல ஜாதி சங்க நிர்வாகிகள் என நேரம் ஆக ஆக கூட்டம் பல ஆயிரத்தை தாண்ட துவங்கியது.
அந்த வழியாக சென்ற கன்னடர்கள் கூட ஜல்லிக்கட்டிற்காக நாங்களும் போராட்டம் நடத்துகிறோம் என சேர்ந்து கொண்டு கன்னடத்தில் கோஷம் எழுப்பினர்.
மத்திய அரசுக்கு எதிராகவும், பீட்டாவை தடை செய்யவேண்டும் என்றும் கோஷம் எழுப்பினர். போராட்டம் இரண்டு மணிநேரம் ஆகும் போது கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அதன் பிறகு போலீஸார் போராட்ட காரர்களிடம் கேட்டு கொண்டதையடுத்து கலைந்து சென்றனர்.  லைவ்டே

கருத்துகள் இல்லை: