நடராஜன் கனவு!இதனை
அறிந்து சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் சிலரிடம் நாம் பேசிய போது,
""ஜெ. இறப்புக்குப் பிறகு கார்டனில் தான் வளைய வந்துகொண்டிருந்தார்
நடராஜன். பொங்கலுக்கு முன்பு கார்டனுக்கு வந்த திவாகரன், நடராஜனுடன்
சீரியஸாக விவாதித்தார். அதனடிப்படையில் இருவரும் டி.டிவி. தினகரனுக்கும்
அவரது மைத்துனர் டாக்டர் வெங்கடேஷுக்கும் எதிராக சசிகலாவிடம் பேசினார்கள்.
அதில் கோபப்பட்ட சசிகலா, இருவரையும் கடுமையாக கண்டித்தார். ஆட்சி அதிகாரம்
முழுமையாக சசிகலா வசம் வரும்வரை தவறான பேச்சுக்களைப் பேசக்கூடாது என
கண்டிஷன் போட்டிருந்தார். முதல்வராக வேண்டுமென்பது நடராஜனுக்கும் கனவு.
அதனால், மத்திய அரசு கொடுத்து வரும் நெருக்கடியை பயன்படுத்தி, ’"முதல்வர்
பதவியில் நீ (சசி) உட்கார வேண்டாம்; எனக்">இதனை
சசிகலா ரசிக்கவுமில்லை, ஏற்கவுமில்லை. இதனால் தனது மனைவி மீதே கடும்
கோபத்தில் நடராஜன் இருந்து வந்த நிலையில்தான் தஞ்சைக்கு வந்து திவாகரனுடன்
ஆலோசித்தார். அப்போது, ’""அக்காவை (சசி) தினகரனும் அவரது மச்சான்
வெங்கடேசும் மயக்கி வெச்சிருக்காங்க. சொத்துக்குவிப்பு வழக்கில்
அக்காவுக்கு ஏதேனும் ஆச்சுன்னா தினகரனை சி.எம்.ஆக்குனாலும் ஆக்கிடுவாங்க''’
என சொல்லியிருக்கிறார் திவாகரன்.
அதே யோசனைதான் நடராஜனுக்கு
இருந்திருக்கு. அப்போ, ""ஆமாமாம், சசி செஞ்சாலும் செய்யும்.
அ.தி.மு.க.வுக்காகவும் ஜெயலலிதாவுக்காகவும் நான் எவ்வளவு செஞ்சிருக்கேன்.
நான் முதலமைச்சராகக் கூடாதா?'' என சொன்ன நடராஜன், ""பொங்கல் விழாவில் நிறைய
விசயங்களைப் பேசு'' என திவாகரனுக்கு பல பாயிண்டுகளை எடுத்துத்தந்தார். பொங்கிய பொங்கல் விழா!நடராஜன்
ஏற்பாட்டில் நடந்த பொங்கல் விழாவில், ’""எம்.ஜி.ஆருக்குப் பிறகு
அ.தி.மு.க.வை கட்டிக்காத்ததில் நடராஜனுக்கு பெரிய பங்கு இருக்கிறது.
அ.தி.மு.க.வை ஆரம்பத்திலிருந்தே நாங்கள்தான் காத்து வருகிறோம். இரட்டை
இலையை மீட்டெடுத்தவர் நடராஜன். மதுரை, மருங்காபுரி இடைத்தேர்தலின்
வெற்றிக்கு தளபதியாக இருந்தவர். அதனால் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த
காளான்கள் அல்ல நாங்கள். கழகத்துக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை யான இந்த
காலக்கட்டத்திலும் நடராஜன்தான் வழிநடத்த வேண்டும்'' என்கிற ரீதியில்
திவாகரன் பேச, அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் பலரும்
அதிருப்தியடைந்தார்கள். ""நடராஜனும் திவாகர னும் பொது வெளியில் இப்படி
பேசுவது உங்களுக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும்'' என சசிகலாவிடமே
சொல்லியிருக்கின்றனர். திவாகரனின்
பேச்சை உடனடியாக கண்டித்தார் முன்னாள் அமைச்சரும் எம்.ஜி.ஆர். காலத்து
அரசியல்வாதியுமான கே.பி.முனுசாமி. அவரது கண்டிப்பும் மறுப்பும்தான் அ.தி.
மு.க.வினரின் ஒட்டுமொத்த கருத்தாகவும் இருப்பதாக சசிகலாவிடம்
சொல்லப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் தான் சசிகலாவை கடந்த ஒரு வாரமாக
நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஏற்கனவே தீபாவுக்கு பெருகி வரும் ஆதரவை கண்டு
இறுக்கமாகவே இருக்கும் அவர், கணவராலும் தம்பியாலும் உருவாகும்
அதிருப்திகளால் எரிச்சலடைந்திருக்கிறார். உடனே அவர்களை தொடர்புகொண்டு
கடுமையாக சத்தம் போட்டி ருக்கிறார் சசிகலா. இதனால், இரவு நேரங்களில்
கார்டனில் அடிக்கடி தொலைபேசியில் மோதல்கள் வெடித்தபடி இருக்கிறது.
மாமன்-மச்சான்களான தினகரனுக்கும் வெங்கடேசுக்கும் சசிகலா கொடுத்து வரும்
முக்கியத்துவத்தை ஜீரணிக்க முடியாமல்தான் எதிரும் புதிருமாக இருந்த இந்த
மாமன் - மச்சான் (நடராஜன், திவாகரன்) இருவரும் ஒன்று சேர்ந்து தினகரனை
அடக்கி, அ.தி.மு.க.வை கைப்பற்ற இப்படியெல்லாம் பேசத்துவங்கியுள்ளனர்''
என்று சுட்டிக்காட்டுகிறார்கள். சசிகலா முடிவு என்ன?முன்னாள்
அமைச்சர் கே.பி. முனுசாமியை தொடர்புகொண்டு நாம் பேசியபோது, ""அ.தி.
மு.க.வை ஆரம்பத்திலிருந்தே தூக்கிச் சுமந்தது நாங்கள்தான் என்றும் ரெட்டை
இலையை மீட்டெடுத்ததே நடராஜன் தான் என்று திவா கரன் பேசியிருக்கிறார். கடந்த
2011-ல் துரோகிகள் என சொல்லி நடராஜன், திவாகரன் உள்ளிட்ட பலரையும்
கட்சியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா. அந்த
சமயத்தில், "அ.தி.மு.க.வையும் ரெட்டை இலையையும் காப்பாற்றியதே நாங்கள்தான்
; நாங்கள் துரோகிகளா?' என ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே
சொல்லியிருக்கலாமே! ஏன், சொல்லவில்லை? இப்போதைய இந்த துணிச்சல் அவருக்கு
எப்படி வந்தது? ஜெயலலிதா
மறைந்துவிட்டார் என்பதாலா? அ.தி. மு.க. இரண்டாகப் பிளவு பட்டு இருந்த
போது, எந்தச் சூழ லிலும் தனது கண வரும் ஏழைகளின் தலைவராகவும் இருந்த
எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இந்த கட்சி பாழ்பட்டு போய்விடக்கூடாது
என்பதற்காக ஜானகி அம்மையார் தாமாகவே முன் வந்து, "இந்த இயக்கத்தை நீங்களே
தலைமையேற்று நடத்துங்கள்' என்று ஜெயலலிதா அம்மாவிடம் ஒப்படைத்து,
"ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுக்குத்தான் இரட்டை இலை சின்னம் சொந்தம்' என்றும்
எழுதி கையெழுத்துப் போட்டு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் தந்தார் ஜானகி
அம்மையார். இது தான் நடந்த வரலாறு. ஏதோ மாமன்- மச்சான்கள் இருவரும் போராடி
ரெட்டை இலையை மீட்டெடுத்த மாதிரி பேசுவதை என்னை போன்ற உண்மை விசுவாசிகளால்
தாங்கிக்கொள்ள முடியாது. தவறான தகவல்களை பேசுவதையும் கட்சிக்கு சம்பந்தமே
இல்லாத இவர்கள் அ.தி.மு.க.வை சொந்தம் கொண்டாடுவதையும் நிறுத்திக்கொள்ள
வேண்டும். இவர்கள்
இப்படி நடந்து கொள்வது பொதுச்செயலாளருக்கு (சசிகலா) சங்கடத்தை
ஏற்படுத்தக்கூடியது. அம்மாவின் கனவுதான் என்னுடையது; அம்மாவின்
லட்சியம்தான் எனது லட்சியம் என உறுதி எடுத்துக்கொண்ட பொதுச்செயலாளர்,
நடராஜன் - திவாகரன் பேச்சுக்களுக்கும் கட்சியை கைப்பற்ற துடிக்கும்
முயற்சிகளுக்கும் கடிவாளம் போட வேண்டும். இல்லையேல் கட்சியில்
குழப்பம்தான் வரும். துரோகிகள்
எனசொல்லி கட்சியிலிருந்து ஜெயலலிதா அம்மாவால் நீக்கப்பட்டவர்களை
சேர்த்துக்கொண்டுதான் அ.தி.மு.க.வை பொதுச்செயலாளர் வழிநடத்தப்போகிறாரா?
அல்லது ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தவர் களை மன்னிக்கமாட்டேன் என நடராஜன் -
திவாகரன் உள்ளிட்டவர்களை புறக்கணித்து அவர்களது தலையீடு இல்லாமல் கட்சியை
வழிநடத்தப்போகிறாரா? என்பதை வெளிப் படையாக தெளிவுபடுத்திவிடுவது பொதுச்
செயலாளருக்கு நல்லது. அதனை செய்யாமல் மௌனமாக கட்சி நடத்துவது
அ.தி.மு.க.வின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல!'' என்கிறார் மிக அழுத்தமாக
கே.பி.முனுசாமி. இரட்டை இலையை மீட்டது எப்படி?எம்.ஜி.ஆரால்
வளர்க்கப்பட்ட அ.தி.மு.க. வி.வி.ஐ.பி.க்கள் பலரும் பல்வேறு
காலக்கட்டங்களில் மாற்று கட்சிகளில் இணைந்துவிட்டனர். அந்தந்த கட்சிகளில்
பிரபலமாக இருக்கும் அவர்கள் சிலரிடம் நாம் பேசியபோது, "அ.தி.மு.க.வின்
இரட்டை இலை சின்னத்துக்கு இரண்டு முறை சிக்கல் வந்திருக்கிறது. ஒரு முறை
இந்திராகாந்தியும் மற்றொரு முறை ராஜீவ் காந்தியும் சின்னத்தை
அ.தி.மு.க.வுக்கு மீட்டுத் தந்திருக்கிறார்கள். 1977-ல் அ.தி.மு.க.வும்
காங்கிரசும் கூட்டணி. முதல் தேர்தல் என்பதால் இரட்டை இலை சின்னம்
அ.தி.மு.க.வின் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக தேர்தல் ஆணையம் தரவில்லை. சுயேட்சை
சின்னமாகவே இருந்தது. அதனால் கூட்டணியில் அ.தி.மு.க. போட்டியிடுகிற இடங்
களில் மட்டும் இரட்டை இலை சின்னமும் போட்டியிடாத இடங்களில் அந்த சின்னம்
சுயேட்சைகளுக்கு ஒதுக்குவ தாகவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது.
இதனால், தேர்தலில் குழப் பம் வரும் என எம்.ஜி. ஆரிடம் சொன்னோம். அவரும்
கவலைப்பட்டார். இந்திராகாந்தியிடம் இப் பிரச்சினையை கொண்டு போகிறார்
எம்.ஜி.ஆர்.! உடனே ப.சிதம்பரத்தை அழைத்து விவாதிக்கிறார் இந்திராகாந்தி.
அப்போ, "இரட்டை இலை சின்னத்தை சுயேட்சைகளுக்கு ஒதுக்கக்கூடாது என தேர்தல்
கமிஷனுக்கு ஒரு அஃபிடவிட்டை எம்.ஜி.ஆர். கொடுக்கட்டும். நீங்கள் தேர்தல்
ஆணையரிடம் பேசுங்கள். சரி யாகும்' என யோசனை சொன்னார் சிதம்பரம். இதனை
எம்.ஜி.ஆரிடம் தெரிவித் தார் இந்திரா. அதனடிப் படையில் எம்.ஜி.ஆர்.
அஃபிடவிட் தயாரித்து சிதம்பரத்துக்கு அனுப்பி வைக்க, டெல்லிக்கு பறந்தார்
சிதம்பரம். ஆனால், அன்றைக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் வெளிநாட்டில்
இருந்தார். உடனே இந்திய தூதரகம் மூலமாக அந்த அஃபிடவிட் தேர்தல் ஆணைய ரிடம்
சேர்க்கப்பட்டது. அவரிடம் இந்திராகாந்தி பேச, அவரும் ஏற்றுக்கொண்டார்.
அதனையடுத்து தமிழகத்தில் சுயேட்சைகளுக்கு இரட்டை இலை சின்னம்
ஒதுக்கப்படவில்லை. அ.தி.மு.க.
ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாக உடைந்திருந்த சமயத்தில் முடக்கி
வைக்கப்பட்டிருந்த இரட்டை இலை யாருக்கு சொந்தம் என்பதில் தேர்தல் ஆணையம்
முடி வெடுக்கும் சூழல் வந்தபோது, ஜானகி அம்மையா ருடன் காம்ப்ரமைஸ்
பேசுகிறார் முத்துச்சாமி. எடுத்த எடுப்பில் ஜானகி அம்மையார் சம்மதிக்க
வில்லை. அதே சமயம், ஜெயலலிதா, பண்ருட்டி ராமச்சந்திரன், திருநாவுக்கரசு
மூவரும் மூப்பனாரை சந்தித்து உதவி கேட்கிறார்கள். சிதம்பரத்தை அழைத்து
ஆலோசிக்கிறார் மூப்பனார். அப்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக
இருந்தவர் பெரிசாஸ்திரி. அவர் ரொம்பவும் முரண்டு பிடிப்பவர். அவரிடம்
ராஜீவ்காந்தி பேசினால் மட்டுமே சாதகமாகும்னு சிதம்பரம் சொல்ல, ராஜீவிடம்
பேசுகிறார் மூப்பனார்.அதேசமயம்,
மூப்பனாரின் நேரடி எதிர்ப்பாளர்களான ஆர்.வெங்கட்ராமன், சிவாஜி
உள்ளிட்டோரிடம் உதவி கேட்கிறார் ஜானகி. அவர்களும் ராஜீவிடம் பேசுகிறார்கள்.
அப்போது, "கட்சியை உடைத்துக்கொண்டு போன ஜெயலலிதா உள்ளிட்டவர்கள் மீண்டும்
கட்சியில் இணையட் டும். ஒன்றுபட்ட அ.தி.மு.க.வுக்குத்தான் காங்கிரசின்
சப்போர்ட் என சொல்லுங்கள்' என யோசனை சொன்னார் ஆர்.வெங்கட்ராமன். அதன்படி,
ராஜீவ் சொல்ல, இணைவதற்கு சம்மதம் தெரிவித்தார் ஜெயலலிதா. அவரிடம் தலைமைப்
பதவியை தருவதற்கு சம்மதித்தார் ஜானகி. கட்சி ஒன்றானது. சின்னமும்
அ.தி.மு.க.வுக்கு கிடைத்தது. இது ராஜீவ்காந்தி முயற்சியால் நடந்தது.
அதனால், அ.தி.மு.க.வை கட்டிக்காத்ததும் ரெட்டை இலையை மீட்டதும் நாங்கள்
தான் என நடராஜனோ சசிகலாவின் உறவுகளோ உரிமை கொண்டாடுவது பித்தலாட்டத்தனம்''
என்று ஆவேசப்படுகின்றனர்.
ரகசியங்கள்!தஞ்சையில்
பொங்கல் விழா என்றால் அதில் அதிரடி அரசியல் பேசுவதுதான் நடராஜனின்
வழக்கம். ஜெ. உயிருடன் இருந்தபோதே, தான்தான் தமிழ்நாட்டின் தலைவிதியை
நிர்ணயிப்பவர் என் பது போல பலமுறை பேசியிருக்கிறார் நடராஜன். இப்போது ஜெ.
இல்லாத நிலையில், அவருக்கு அர சியல் அடைக்கலம் தந்து, உயிரைக்
காப்பாற்றியதே தன்னுடைய குடும்பம் என்று பேசியிருக்கிறார். பொதுவாக,
தஞ்சை விழா மேடையிலும் விழாவுக்கு வரும் பிரபலங்களிடமும் ஜெ.வின்
ரகசியங்கள் தனக்குத் தெரியும் என்று சுட்டிக் காட்டுவது நடராஜனின் வழக்கம்.
இப்போது கட்சித் தொண்டர்களிடம் சசிகலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்
எதிர்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், ஜெ.வுக்கு அரசியல் வழிகாட்டியதே
தங்கள் குடும்பம்தான். எல்லாமே நாங்கதான் என்று சொல்லி, தலைமைக்கான உரிமை
தன் மனைவிக்கு இருக்கிறது எனக் காட்ட நினைக்கிறார் நடராஜன். ஜெ. பற்றிய
ரகசியங்களையும் அவ ருக்காக தன் குடும்பம் பாடுபட்டது என்பதையும்
முன்னிறுத்தி அரசியல் செய்ய கணக்கிடுகிறார்.அவர்
எதிர்பார்த்ததுக்கு மாறாக அ.தி.மு.க. தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும்
எதிர்ப்பும் அதிருப்தியும் அதிகரித்து, சசிகலாவையும் செம டென்ஷனாக்கி
விட்டது. -இரா.இளையசெல்வன் -வடிவேல் நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக