கடற்கரை நோக்கிச் செல்லும் சாலைகளில் மக்கள் வெள்ளம் ;
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி சென்னை மெரினா கடற்கரையில் நேற்று 4-வது
நாளாக தொடர்ந்த போராட்டத்தின்போது 7 லட்சத்துக் கும் மேற்பட்ட இளைஞர்கள்
திரண்டனர். >
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சென்னை
மெரினா கடற் கரையில் 4-வது நாளாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த
போராட்டக் களத்தில் நேற்று காலை 8 மணி அளவில் 2 ஆயிரம் பேர் மட்டுமே
இருந்த நிலையில், பிற்பகலில் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது. நேரம் ஆக,
ஆக, மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் மெரினா கடற்கரை
மக்கள் வெள்ளத்தில் மிதந்து, அந்த இடமே ஸ்தம்பித்தது.
அங்குமட்டுமில்லாது, கிழக்கு கடற்கரை சாலையில் ஈஞ்சம்பாக் கம்,
வெட்டுவாங்கேணி, நீலாங் கரை, பாலவாக்கம், கொட்டிவாக் கம், திருவான்மியூர்,
அடையார் மற்றும் கோடம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர், தேனாம்பேட்டை,
புளியந்தோப்பு, புழல், ஆவடி, அம்பத்தூர் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட
பகுதிகளில் பொது மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஜல்லிக்கட்டுக்கு
ஆதரவாக பேரணி மற்றும் போராட்டங்களை நடத்தினர்.
ரயிலில் வந்த மக்கள்
முழு கடையடைப்பு போராட்டத் தால் பஸ் மற்றும் ஆட்டோ போக்குவரத்து முற்றிலும்
முடங்கிய நிலையில், பெரும்பாலானோர் பறக்கும் ரயிலில் வந்து, சேப் பாக்கம்,
திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம் ஆகிய ரயில் நிலையங்களில் இறங்கி,
மெரினாவை அடைந்தனர். இதனால் பாரதி சாலை, வாலாஜா சாலை உள்ளிட்ட காமராஜர்
சாலையை ஒட்டிய பல்வேறு சாலைகள் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தன. இப்பகுதி
வழியாக வந்த பொது மக்கள், காமராஜர் சாலையில் நுழைந்ததால், அந்த சாலையில்
போக்குவரத்து முற்றிலும் முடங் கியது. மேலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக
டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, டாக்டர் பெசன்ட் சாலை, சுவாமி சிவானந்தா சாலை
வழி யாக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் பல்லாயிரக்கணக் கானோர்
குடும்பத்துடன் மெரினா வுக்கு வந்தனர். இதனால், அந்த பகுதியில் கடும்
போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ராஜாஜி சாலை, கொடி மரச்சாலை, பூந்தமல்லி
நெடுஞ்சாலை, அண்ணா சாலை வழியாகவும் அதிக அளவில் போராட்டக்காரர்கள்
வந்ததால், அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கைக்குழந்தையுடன் பங்கேற்பு
இந்த போராட்டத்தில் பொது மக்கள் பலர் தங்கள் குழந்தை களுடன் வந்திருந்தனர்.
கைக்குழந் தையுடன் பங்கேற்ற தேனாம் பேட்டையைச் சேர்ந்த ஏ.ஜேம்ஸ்- அமலா
தம்பதி கூறும்போது, “எங்கள் உணர்வை பிரதிபலிக்கும் விதமாகவே
கைக்குழந்தையுடன் பங்கேற்றோம்” என்றார்.
போராட்டத்தில் பங்கேற்றவர்க ளுக்கு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்
உணவு, குடிநீர், பழங்கள், பழச்சாறுகள் உள்ளிட்ட வற்றை வழங்கினர். அதை தன்
னார்வலர்கள் முறையாக போராட் டக்காரர்களுக்கு விநியோகம் செய்தனர்.
ஒத்துழைத்த வானிலை
கடந்த 3 நாட்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், வங்கக் கடலில் நிலவும்
காற்றழுத்தம் காரணமாக நேற்று, வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இதனால்
போராட்டத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கானோரின் உடல் நீர் இழப்பிலிருந்து
தப்பியது.
மெரினாவில் இயல்பாக போராட் டமோ, விழிப்புணர்வு நிகழ்ச்சியோ நடைபெற்றால்
குப்பைகள் அதிக அளவில் சிதறிக் கிடக்கும். ஆனால் தற்போது 4 நாட்களாக நடை
பெற்று வரும் போராட்டத்தில் அங்கு குப்பைகளை பார்க்க முடிய வில்லை.
போராட்டக் குழுவில் உள்ள தன்னார்வலர்கள் பலர், தண்ணீர் பாக்கெட், டீ கப்,
உணவுக் கழிவுகள் உள்ளிட்டவற்றை பெற்று, தனி இடத்தில் வைத்தனர். அதன் மூலம்
அப்பகுதியை சுத்தமாக வைத்துக்கொண்டனர்.
தொழுகைக்கு ஏற்பாடு
இப்போராட்டத்தில் ஜாதி மத பேதமின்றி ஏராளமான முஸ்லிம் களும்,
கிறிஸ்தவர்களும் பங்கேற்ற னர். வெள்ளிக்கிழமை என்பதால், முஸ்லிம்கள் தொழுகை
நடத்து வதற்கு ஏதுவாக, நேற்று கடல் மணற்பரப்பிலேயே ஏற்பாடு செய்
யப்பட்டிருந்தது. அங்கு முஸ்லிம் கள் தொழுகை நடத்தினர்.
மெரினாவில் பல்வேறு குழுக் கள் தனித்தனியே பல்வேறு வடி வங்களில் போராட்டம்
நடத்தி வந்த நிலையில், ஒரு குழுவினர் காளையை ஓட்டிவந்து போராட்டத் தில்
ஈடுபட்டனர். இவர்களின் போராட்டம் அனைவரையும் கவர்ந்தது. மேலும்
அப்பகுதியில் ஜல்லிக்கட்டு காளையை இளைஞர் அடக்குவது போன்ற மணல் சிற்பத்தை
கடற்கரை மணலில் கலைஞர்கள் அமைத்திருந்தனர்.
போராட்டத்தை கைவிட மறுப்பு
மயிலாப்பூர் காவல் சரக துணை ஆணையர் பாலகிருஷ்ணன் போராட்டக்காரர்களைச்
சந்தித்து, “ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர் பாக மாநில அளவில் திருத்தம்
மேற்கொண்டு, வரைவு அவசரச் சட்டத்தை தமிழக அரசு, மத்திய உள்துறை
அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளது. ஓரிரு நாட்களில் ஜல்லிக்கட்டு
நடத்தப்படும். அதனால் போராட்டத்தை உடனடி யாக கைவிட வேண்டும் என்று முதல்வர்
ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எனவே அனைவரும் போராட் டத்தை
கைவிட வேண்டும்” என்றார். அதை ஏற்காத போராட்டக்காரர்கள், “வாடிவாசலை
திறந்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம்” என்று உறுதியாக
கூறிவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக