வியாழன், 19 ஜனவரி, 2017

தடை அதை உடை ! களத்தில் இருக்கும் காவலர்களும் மாணவர்கள் வெல்ல வேண்டும் என்றே விரும்புகிறார்கள் ..

Image may contain: 5 people, people standing, crowd and textநேற்று இரண்டு மணி நேரம் மெரினா களத்தில் ஆதரவு தெரிவிக்க சென்று இருந்தோம் அங்கு ஜாதி இல்லை ஆனால் அவைகளை முகநூலில் மட்டுமே சில இடத்திலே இருப்பதை காணுகிறேன் வருத்தமாக உள்ளது . ஒன்று கூடி #PETA வில் கூடியுள்ள ஆதிக்க சக்திகளை ஒடுக்க வேண்டிய நேரம் இது ..
இந்தியா மட்டும் இல்லை உலகமே உற்று நோக்கி கொண்டு இருக்கிறது .. ஸ்ரீலங்காவில் தமிழர்கள் ஆதரவு தருகிறார்கள் ., சிங்கப்பூரில் ., லண்டன் தெருவிலே கூடுகிறார்கள் கனடா பிரதமர் ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று விசாரிக்கிறார் ..
இப்படி அரசியல் சாரா போரட்டம் இது வரை உலகத்திலே சாத்தியம் உண்டென்றால் இல்லை .. நிச்சயம் இல்லை .. நமது மாணவ கண்மணிகள் வெல்ல வேண்டும் .. அவர்கள் இதே அறவழியில் செல்ல வேண்டும் .. நேற்று போலவே இன்றும் தண்ணீர் மற்றும் உணவுகள் எடுத்த செல்ல உள்ளோம் ..
#ஜல்லிக்கட்டு நடத்துவோரை கைது செய்யவேண்டும் ராஜ்நாத்சிங்பாஜக அமைச்சர் என்று செய்திகள் வருகிறது .. காங்கிரஸ் எம்எல்ஏ விஜ்யதாரிணி ., புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் எதிர்ப்பு குரல் எழுகிறது ..
ஆனால் மாணவர்கள் மாநில அரசே சட்டம் இயற்றலாம் என்ற கருத்தில் தெளிவாக உள்ளதை உணர முடிகிறது .. இவர்களை ஏமாற்ற முடியாது .. மோடி அரசு பணிந்து ஆக வேண்டும் வேறு வழி இல்லை .
..
அப்படி மோடி அரசு #காவிரி போலவே, #NEET போலவே , #AIMS போலவே ., தமிழகத்தை இம்முறையும் வஞ்சித்தால்மாநில அரசின் உரிமையை concurrent கையில் எடுத்து சட்டம் ஏற்றலாம் என்று முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி கட்ஜு அறிவுரை கூறியுள்ளார் ...
நேற்று 30 நிமிடம் காவல் துறையுடன் அரை மணி நேரம் உரையாடினோம் புரிந்தது ஒன்றே தான் அரசு ஆதரவு தருகிறதோ இல்லையோ ., IAS IPS அதிகாரிகள் ஆதரவு தருகிறார்களோ இல்லையோ ., ஆனால் களத்தில் இருக்கும் எட்டுகளும் அர்ட்லிகளும் மாணவர்கள் வெல்ல வேண்டும் என்றே விரும்புகிறார்கள் ..
காலை வெப்பத்தில் ., இரவின் கடும் குளிரில் ... குரலை எழுப்பும் அந்த உணர்வுக்கு ., மின் வெட்டு அதிமுக அரசு செய்தும் காத்த அந்த கண்ணியத்துக்கு ., அறவழி தவிர்க்காத அந்த ஒழுக்கத்துக்கு ., சாப்பிட பொருள்களை சிதறாமல் ஒரே இடத்திலே போடும் அந்த சுத்தத்திற்கு தலையை வணங்குகிறேன் ..
மாணவ கண்மணிகள் வெல்ல வேண்டும் என்றே ஆசை மனதில் ஊறுகிறது .
வெல்ல வேண்டும் .. தமிழ் குரல் உலகெமெங்கும் .. தடை அதை உடை .. நீ சரித்திரம் படை ...  முகநூல் பதிவு  சவேரா

கருத்துகள் இல்லை: