செவ்வாய், 17 ஜனவரி, 2017

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெ.தீபா ஆதரவாளர்கள் சாலை மறியல்

எம்.ஜி.ஆரின் பிறந்தநாளையொட்டி சென்னை மெரீனாவில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஜெ. அண்ணன் மகள் ஜெ.தீபா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெ.தீபா வருகையையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.அவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தீபாவுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்கள் ஜெயலலிதா, ஜெ.தீபா உருவப்படம் பாக்கெட் சைஸ் அட்டையை வைத்திருந்தனர். மேலும் தீபாவுக்கு ஆதரவான பேனர்களையும் வைத்திருந்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுரில் இருநது தீபாவுக்கு ஆதரவானவர்கள் காலையில் 5 மணியில் இருந்தே குவிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.நக்கீரன்

கருத்துகள் இல்லை: