வெள்ளி, 20 ஜனவரி, 2017

போலீஸ்காரர்களை தட்டி எழுப்பிய ஜல்லிகட்டு : வேலையே போனாலும் உங்களோடு நானும் வருகிறேன்

மத்திய அரசுக்கு எதிரான  ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டம் தமிழர் உரிமை மீட்புப் போராட்டமாக பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டது. மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து துறை சார்ந்தவர்களும் தமிழால் இணைந்தனர். இந்நிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துத் துறை எஸ்.ஐ. சேகரன் என்பவர் சீருடையுடன் வந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். ” உங்கள் போராட்டத்தை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. எனக்கு வேலையே போனாலும் பரவாயில்லை. நானும் உங்களோடு போராடுகிறேன்” என்றார். ஆனால் போராட்டக்காரர்கள், ” ஐயா நீங்கள் இப்படி சொன்னதே எங்களுக்கு போதும். உங்கள் வீட்டில் உங்களது மகன்கள்  இருந்தால் அனுப்பி வையுங்கள், உணர்வுள்ள ஒரு தமிழர் காவல்துறை அதிகாரியாக இருப்பது தான் எங்களுக்குத் தேவை” என அனுப்பி வைத்தனர்.


சென்னை மெரீனா கடற்கரையில் இன்று 4வது நாளாக ஜல்லிக்கட்டு அனுமதி கோரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் லட்சக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு கைவிரித்ததையடுத்து இன்று மேலும் சூடுபிடித்துள்ளது போராட்டக்களம்.
இந்நிலையில், தற்போது மெரீனா போராட்ட களத்தில், பாதுகாப்புக்காக அங்கிருந்த போலீஸ்காரர் ஒருவர் மீடியாக்களுக்கு திடீரென பேட்டியளித்தார்.
அந்த பேட்டியில், எனது சொந்த ஊர் ராமநாதபுரம், விவசாயம் அழிந்ததால், பஞ்சம் பிழைக்க சென்னை வந்தோம். இதற்கு மேலும், பஞ்சம் பிழைக்க அமெரிக்காவிற்கா போகணும் என்று தெரிவித்தார்.
மேலும் உயர் அதிகாரிகளின் அழுத்தம் இருந்தாலும் எனக்கு பயமில்லை. இந்த போராட்டம் வெற்றிபெறும். அதனால், இதோடு நிறுத்திவிடாமல் மணல் திருட்டை ஒழிக்க போராடுவோம். பாரத் மாதாகி ஜே! என்று கோஷம் எழுப்பி சல்யூட் அடித்தார்.  லைவ்டே

கருத்துகள் இல்லை: