புதன், 18 ஜனவரி, 2017

பன்னீர்செல்வம் :மாணவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் போராடி வரும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த இரு தினங்களாக ஒட்டுமொத்த தமிழகமே ஸ்தம்பிக்கும் வகையில் இளைஞர்கள் தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்கள் முதல்வர் பன்னீர் செல்வம் நேரில் வர வேண்டும் என்றும் உடனடியாக அவசர சட்டத்தை பிறபிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் “ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்தை பிறப்பிக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்றும் இது தொடர்பாக பிரதமர் மோடி தான் நாளை சந்திக்க செல்ல உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடி வரும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும்” என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை: