;இந்த போராட்டத்தை எந்தவித அரசியல் கட்சியின் சார்பு இல்லாமல் பொதுமக்களாக வெகுண்டெழுந்து நடத்துகின்றனர். இதற்கு தனது ஆதரவை தெரிவிக்க திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்ட களத்திற்கு சென்றார்.
;ஆனால் இது அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்டம் இல்லை எனவே ஸ்டாலினின் ஆதரவு தங்களுக்கு தேவையில்லை என அவரை மாணவர்கள் திருப்பி அனுப்பினர். இது மக்கள் போராட்டம், அரசியல்வாதிகள் போராட்டத்தில் பங்குபெற வேண்டாம் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர்.>இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், மாணவர்கள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவிக்கவே வந்தேன். தை மாதம் முடிவதற்குள்ளாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டு அந்த இடத்தை விட்டு சென்றார். லைவ்டே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக