சனி, 21 ஜனவரி, 2017

கேள்வி :- திமுகவினரின் மிகப்பெரிய பிரச்சினை என்ன?

கேள்வி :- திமுகவினரின் மிகப்பெரிய பிரச்சினை என்ன?
பதில் :- எதையும் அலசி ஆராய்ந்து முன்கூட்டியே தீர்க்கமாக சொல்வது. எடுத்துக்காட்டிற்கு ஜனவரி 3 ஆம் தேதியே ஸ்டாலின், ஜல்லிக்கட்டை நடத்த அரசு அவசரச்சட்டம் இயற்றவேண்டும் என்று அலங்காநல்லூர் போராட்டத்தில் பேசினார். (பிபிசி http://www.bbc.com/tamil/india-38493687 )
வழமைப்போல வேதவிற்பன்ன ஊடகங்களும் அவர்களின் அடிப்பொடிகளான பஜகோவிந்த சமூக ஊடகப்பங்களுக்கும் கெக்கெபிக்கெவென சிரித்தன. மூன்று வாரம் போராட்டம், உணர்ச்சி வயப்படல் என்று மக்களை அலைக்கழித்தபின்னர் மோடி - பன்னீர் அணி இன்று அவசர சட்டமியற்றுகிறது. வெற்றி வெற்றி என்று ஆர்.ஜே.பாலாஜிகள் திடீர் தலைவர்களாகி திமுக போராட்டத்தின் வெற்றியை தனகு சாதகமாக்குகிறது என்று பாய்கிறார்கள். தும்பைவிட்டு ஏன் வாலைப்பிடிக்கிறீர் என்று பகுத்தறிவாக கேட்பதுதான் திமுகவினரின் பிரச்சினை. தமிழக மக்களுக்கு அதிமுக அடிமை ஆட்சிமுறையோ இல்லை மோடியின் பசப்பு ஆட்சியோதான் சரியோ என்று சமயங்களில் தோன்றும், என்ன செய்வது நீரடித்து நீர் விலகுமா. மக்களின் அறியாமை என்னை வதைக்கிறது. முகநூல் பதிவு  கிளிமூக்கு அரக்கன்

கருத்துகள் இல்லை: