சனி, 21 ஜனவரி, 2017

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த போலீஸார்: பதறிய உயர் அதிகாரிகள்!

சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட் டுக்கு ஆதரவான தொடர் போராட் டத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதில் இரு போலீஸார் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினர். இதனால் போலீஸ் உயரதிகாரிகள் பதட்டத்துக்கு உள்ளாயினர்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் 4-வது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற பலர், தமிழர் மரபு மற்றும் ஜல்லிக்கட்டின் சிறப்புகள் குறித்து ஆக்ரோஷமாக பேசினார்.
அப்போது அங்கு சீருடையில் பணியில் இருந்த, புதுப்பேட்டை ஆயுதப்படைப் பிரிவு காவலர் மாய அழகு, திடீரென கூட்டத்துக்குள் நுழைந்து, ஜல்லிக்கட்டுக்கு ஆதர வாக மைக்கில் பேசினார். இது அங்கு பாதுகாப்பில் இருந்த காவல்துறை உயரதிகாரிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
உடனே பேச்சை நிறுத்தும்படி அறிவுறுத்தினர். போராட்டக் குழுவி னர், போலீஸாரை தடுத்து நிறுத்தினர். சீருடையில் பேசியது தவறு என்றதும், காவலர் மாய அழகு, சீருடையை கழற்றினார். பின்னர் போராட்டக் குழுவினர் வேண்டுகோளுக்கு இணங்க மீண் டும் சீருடையை மாட்டிக்கொண்டு, அங்கு வந்திருந்த மயிலாப்பூர் காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் முன்பு சல்யூட் அடித்து, நின்றார். அவரை காவல்துறையினர் துன் புறுத்த வாய்ப்புள்ளது எனக்கூறி, போராட்டக் குழுவினர் போலீஸாரி டம் காவலர் மாய அழகுவை ஒப்படைக்க மறுத்தனர். எதுவும் செய்யமாட்டோம் என்று போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, காவலரை அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து போக்கு வரத்து காவலர் விஜயகுமார் என்பவர், சீருடையில் வந்து தானும் போராட்டத்துக்கு ஆதர வாக பேசுவதாக போராட்டக் குழு வினரிடம் கூறினார். பிரச்சினையில் சிக்க வேண்டாம் என்று கூறி, போராட்டக் குழுவினர், அந்த காவ லரை திருப்பி அனுப்ப முயன்றனர். காவலர் பிடிவாதமாக இருந்ததால், போராட்டக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தனது கருப்பு சட் டையை கழற்றி கொடுக்கவே, அதை அணிந்துக்கொண்டு, போராட்டத்தில் பங்கேற்று காவலர் பேசினார்.
இதனால் பதறிப் போன போலீஸார், அவரையும் பிடித்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பானது tamilthehindu

கருத்துகள் இல்லை: