சனி, 21 ஜனவரி, 2017

அதிமுக அமைச்சர்கள் மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை தொடங்கிவைப்பார்கள் # பன்னீர்.

உங்களுக்கு வெட்கமாக இல்லையா ?
அலங்காநல்லூரில் குறைந்தது இரண்டு மாடுகளை வாடிவாசல் வழியே விடுங்கள்...நாங்கள் போய்விடுகிறோம் என்று இளைஞர்கள் கெஞ்சிய பொது....
உங்கள் ஏவல் படை அவர்களை தடியடி நடத்தி 250 பேரை கைது செய்தீர்கள்...
முதல்வர் அதைப்பற்றி வாய் திறக்கவே இல்லை.
மாறாக தடியடி நடத்தவே இல்லை என்று....
ஜெயாவைப்போலவே கூசாமல் வாய் நிறைய பொய் சொன்னீர்களே பன்னீர் !

மக்கள் இரவும் பகலும் தொடர்ந்து வெய்யில் குளிர் மழையில அவதிப்பட்டுக்கொண்டு இருந்த பொது உங்க மந்திரிகளின் எவனாவது அவங்களிடம் போனானா ? நீங்கள் மக்களின் அக் மார்க் விரோதிகள்...
இப்போது கொண்டுவந்த அவசர சட்டத்தை பொங்கலுக்கு முன் கொண்டுவந்திருக்கலாமே ஏன் கொண்டுவரலே ?
பொய்சொல்லி மக்களை ஏமாற்றி ஏமாற்றியே பழக்கப்பட்டுவிட்டீர்கள் பன்னீர்.

இப்பவும் அவசர சட்டத்தைக்காட்டி மக்களை ஏமாற்றி கூட்டத்தைக் கலைக்க ஆல்வா கொடுக்கிறீர்கள்.
இந்த அவசர சட்டம் கூட மாணவர் போராட்டத்தின் வெற்றி !
அதில் உங்களுக்கு கடுகளவு கூட உரிமை இல்லை.
பன்னீர் அவர்களே உங்களுக்கோ உங்கள் அமைச்சர் அடிமைகளுக்கோ வாடிவாசல் ஜல்லிக்கட்டு தொடங்கிவைக்க கிஞ்சித்தும் உரிமை இல்லை.
மக்களை ஏமாற்றாதீர்கள்...நீங்கள் நிரந்தரமாக ஏமாந்து போவீர்கள்.  முகநூல் பதிவு சென்னை தாமோதரன்

கருத்துகள் இல்லை: