வெள்ளி, 20 ஜனவரி, 2017

காட்சிப்பட்டியலில் இருந்து காளையை நீக்க மத்திய அரசு அவசர சட்டம்?

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து கடந்த 4 நாட்களாக போராடி வருகின்றனர். இந்நிலையில், மத்திய அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையை ஏற்று காட்சிப்படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை நீக்கி அவசர சட்டம் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டி இனி வரும் காலங்களில் தடையின்றி நடைபெற வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். லைவ்டே

கருத்துகள் இல்லை: