சனி, 21 ஜனவரி, 2017

தமிழகமெங்கும் போராட்டம் தொடரும் ! போராட்டக்காரர்கள் திட்டவட்ட அறிவிப்பு

இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர் வித்யாசாகர்ராவ். நாளை காலை 10 மணிக்கு மதுரை அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விளையாட்டை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைக்கிறார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னை போராட்டக்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர், ராமநாதபுரம், கும்பகோணம், கும்மிடிப்பூண்டி, விருதுநகர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் போராட்டக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.நக்கீரன்

கருத்துகள் இல்லை: