செவ்வாய், 17 ஜனவரி, 2017

தீபா அரசியல் பிரவேசம் ... இருவரும் போட்டோ சூட்டில் குறைவில்லை


ஜெயலலிதா மரணத்தின் பின்னர் சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் ஆகி விட்ட நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று தமிழகம் முழுக்க உள்ள சில ஆயி்ரம் பேர் கோரிக்கை விடுத்து வந்ததோடு அவர் பெயரில் பேரவையும் துவங்கினர்., தீவிர உறுப்பினர் சேர்க்கையும் நடந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு பகுதிகளிலும் தீபா பேரவை என்ற பெயரில் கட்அவுட், போஸ்டர், பேனர்களை வைத்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாகவே தீபாவின் ஆதர்வாளர்கள் திநகரில் இருக்கும் அவர் வீட்டின் முன்னால் மாலை நேரங்களில் கூடி அரசியலுக்கு வர வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பிய நிலையில், தீபா நாளை அதிகாரபூர்வமாக வெளியில் வருகிறார்.

தீபா சார்பில் இன்று ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தியில், புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு நாளை 17.1.2017 காலை 6.30மணிக்கு தி நகரில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திற்கு திருமதி தீபா சென்று அங்குள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
காலை 7.மணிக்கு் சென்னை மெரீனா கடற்கரையில் அமைந்துள்ள தங்கத தலைவர் அவர்கள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி எதிர் கால திட்டம் குறித்து சபதம் எடுக்கிறார்
காலை 11 மணிக்கு திநகர் சிவஞானம் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் எதிர் கால திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார்.
மாலை 4 மணிக்கு திநகர் இல்லத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் உருவப் படங்களுக்கு மரியாதை செலுத்துகிறார் தொடர்ந்து கூடியிருக்கும் தொண்டர்கள், ஆதரவாளர்கள் ஆ‌கியோ‌ரி‌ன் கருத்துக்களை கேட்டறிந்து அவர்களிடையே உரையாற்றி இனிப்புகள் வழங்குகிறார் ” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நற்பணி மன்றம் சேவை அமைப்பின் மூலம் அரசியலுக்கு வரும் தீபா ஜெயலலிதாவின் தோற்றத்திற்கு மாறியுள்ளார். இதற்காக ஜெயலலிதாவின் விடியோக்களை மீண்டும் மீண்டும் போட்டுப்பார்த்து அவரது நடை, உடை, பாவனைகளை அச்சு அசலாக அப்படியே பிரதிபலிக்கும் பயிற்சிகளை தீபா எடுத்துள்ளார். தொண்டர்கள் முன்னால் வரும் போது ஜெயலலிதா பொல வரவும், இரட்டை விரலைக் காட்டவும், அவர் கையசைப்பது போல அசைக்கவுமான பயிற்சிகளை பெற்றிருக்கும் தீபா ஜெயலலிதா போல கழுத்து, கைகள் வரை மூடிய சேலைக்கும் மாறியுள்ளார். இன்று மதியம் அவரது வீட்டில் இந்த தோற்றத்தை வைத்து போட்டோ ஷூட்டும் நடந்துள்ளது. அந்த போட்டோ ஷூட்டில் ஜெயலலிதா போலவே தோற்றமளித்துள்ளார் தீபா. நாளை தொண்டர்கள் முன் தோன்றும் போது அம்மா இல்லாத குறையை தோற்றத்தில் நிறைவு செய்வாரா என்பதுதான் எதிர்பார்ப்பு!  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: