நாகர்கோவிலில் நடைபெற்ற கூட்டத்தில் கனிமொழி பேசியதாவது
டெசோ மாநாட்டிற்கு ஆட்சி பெறுப்பில் இருக்கும் ஜெயலலிதா அனுமதி அளிக்க மறுத்தார். அதுதொடர்பான வழக்கில் நீதி தமிழகத்தில் இருக்கிறது என்பதை நிலைநாட்டும் வகையில் நீதிபதிகள் தீர்ப்பைத் தந்தனர். அதற்குமுன்பாகவே டெசோ மாநாடு வெற்றி பெற்று விட்டது. போராட்டங்களுக்கு கலைஞர் சளைத்தவர் அல்ல.
டெசோ மாநாட்டை தேர்தலுக்காக நடத்துகிறார்கள் என்று சுப்பிரமணிய சுவாமி, ஒரு காலத்தில் நம்முடன் இருந்த நெடுமாறன், வைகோ, கலைஞரை முற்றும் முதலுமாக எதிர்க்கூடிய இலங்கை அதிபர் ராஜபக்சே போன்றவர்கள் கூறினார்கள்.
இலங்கையில் வாழக்கூடிய சகோதர சகோதரிகளுக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை இருக்கிறதா?, எது அரசியல் நாடகம்? எது அரசியல் விளையாட்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்று வருகிறது. தமிழர்கள் என்பதற்கான அடையாளங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. தமிழர்களின் வழிப்பாட்டுத் தலங்கள் இடிக்கப்படுகின்றன. அங்கு தமிழர்கள் முகமற்றவர்களாக வாழும் கட்டாயத்தில் உள்ளனர். நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நடத்தப்பட்டது டெசோ மாநாடு.
தமிழத்தில் விலைவாசி உயர்வு, கடுமையான மின்வெட்டு உள்ளது. தொழில் தொடங்க யாரும் இங்கு வருவதில்லை. இந்த ஆட்சி தொடர்ந்தால், தமிழகம் பின்னோக்கி போய்விடும்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக தோற்பது உறுதி. அதற்கான பாதையை அவர்களே வகுத்து விட்டனர். திமுக 40 தொகுதியிலும் வெற்றி வெறும் என்று கூறினார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக