சனி, 1 செப்டம்பர், 2012

பாபிலோனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்?


கண்ணம்மா பட இயக்குனர் எஸ்.எஸ்.பாபா விக்ரம் இயக்கத்தில் கருனாஸ், பாபிலோனா, வி.எஸ்.ராகவன்,நாசர் நடிக்கும் படம் ‘பொம்மை நாய்கள்’. பகலில் பொம்மைகளாக இருக்கும் பொம்மை நாய்கள் இரவில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறி வில்லன்களை பழி  வாங்குகின்றன. 
பொம்மை நாய்களை ஆக்‌ஷன் ஹீரோக்களாக மாறும் சக்தியை உருவாக்கும் விஞ்ஞானியாக வி.எஸ்.ராகவன் நடித்துள்ளார். நடிகை பாபிலோனா கவர்ச்சி மட்டும் காட்டி நடிக்காமல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சமீபத்தில் மறைந்த பாடகி சொர்ணலதா இந்த படத்தில் 
”பட்டுச்சேலை தேவையில்லை மாமா
ஒரு பவுன் நகையும் தேவையில்லை மாமா
மஞ்சத்தாலி ஒண்ணுபோதும் மாமா”

என்ற பாடலை பாடியுள்ளார். அவர் பாடிய கடைசி பாடல் இது தான். இந்த பாடலை ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மிகப்பெரிய செட் போட்டு கருணாஸ், கோவை சரளாவுடன் 30 ஜோடி நிஜ குறவர்களை ஆட வைத்திருக்கிறார்களாம். பொம்மை நாய்கள் விரைவில் ஆக்‌ஷன் ஹீரோக்களாக களத்தில் இறங்குமாம்.

கருத்துகள் இல்லை: