latest news:We first realized something was
wrong when we started circling above Rotterdam over and over, and the
captain told us there was some problem in Schiphol. We spent about four
hours on the ground after arriving," said Erna, a passenger, who asked
that her surname not be used.
A spokeswoman for
the airline, Vueling, said: "There was never any danger. There was a
lack of communication between the pilot and the tower and the airport
has activated the security protocol."
Viru News
மலாகாவில்
(ஸ்பெயின்) இருந்து அம்ஸ்ட்டர்டாம் (நெர்லாந்து) நோக்கி வந்த விமானம்
ஒன்று கடத்தல்காரர்களால் ஹைஜாக் செய்யப்பட்டது என்ற செய்தி, ஐரோப்பிய
மீடியாக்களில் இந்த நிமிடத்தில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
சற்று
நேரத்துக்கு முன் இந்த விமானம், இரு போர் விமானங்களால் எஸ்கார்ட்
பண்ணப்பட்ட நிலையில், ஸ்கிபோல் ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டது.தரையிறங்கிய விமானத்தை, விமான நிலைய மெயின் டர்மினலுக்கு அருகே கொண்டு வராமல், 2 கி.மீ. தொலைவில் ஒதுக்குப்புறமான இடம் ஒன்றில் நிறுத்தியுள்ளனர். விமானம் நிறுத்தப்பட்ட இடத்தை பாதுகாப்பு படை வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், மற்றும் முதலுதவி வாகனங்கள் சூழ்ந்துள்ளன.
வூலிங் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இது என்று தெரியவருகிறது.
நெதர்லாந்து விமானப் படையின் இரு F16 விமானங்கள் இந்த விமானத்தின் இரு பக்கத்திலும் எஸ்கார்ட் பண்ணி வந்து, தரையிறங்க விட்டபின் பறந்து சென்றன. விமான நிலைய அதிகாரிகள் இது தொடர்பான தகவல் எதையும் வெளியிட மறுத்துள்ளனர்.
தற்போது, ஸ்கிபோல் ஏர்போர்ட்டில் ஒதுக்குப்புறமாக நிறுத்தப்பட்ட இந்த விமானத்தை லைவ்வாக நெதர்லாந்து டி.வி. சேனல்கள் டெலிகாஸ்ட் செய்த வண்ணம் உள்ளன. விமானத்தில் இருந்து இதுவரை யாரும் இறங்கவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக