தமிழக பாதிரியார் சங்கம் புகார்: ரூ.50 கோடி கமிஷன் தராமல் ஏமாற்றிவிட்டார்! ஆலயத்துக்கு வருபவர்களிடமும் பணம் வசூல் செய்து கொடுத்துள்ளார்கள். இவர்களுக்கே கமிஷன் வரவில்லை என்றால், முதலீடு செய்தவர்களின் பணம் என்னாயிற்று?
10 சதவீத கமிஷன் கிட்டாதவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்கள், ஆனால், ரூ.500 கோடி வரை முதலீடு செய்தவர்கள் ஏன் புகார் கொடுக்கவில்லை?
Viru News
தமிழகத்தின்
பல பகுதிகளைச் சேர்ந்த பாதிரியார்கள் சிலர், சுமார் ரூ.500 கோடி வரை வசூல்
செய்து கொடுத்ததாகவும், ஆனால், அதற்கான கமிஷன் தொகை வரவில்லை எனவும்
போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். அகில இந்திய கிறிஸ்தவ உரிமை இயக்க தலைவர்
பாதிரியார் சாம் ஏசுதாஸ், போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் இந்த புகாரை
கொடுத்துள்ளார்.
திருமுல்லைவாயிலை சேர்ந்த 38 வயதான ஜான் பிரபாகரன் என்பவர், ‘ஹிம்’ என்ற நிறுவனத்தை தொடங்கி இருப்பதாகவும், அதற்கு மாதம்தோறும் ரூ.20,000 வசூல் செய்து கொடுத்தால் 10 சதவீதம் (ரூ.2,000) கமிஷன் தருவதாகவும் கூறியதை நம்பி ஏமாந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமிஷனரிடம் புகார் கொடுத்தபின் செய்தியாளர்களை சந்தித்த பாதிரியார், ஜான் பிரபாகரன் கூறியதை நம்பி ஆந்திரா, கர்நாடகா, கேரளா தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பாதிரியார்கள் பலரும் ஆலயத்துக்கு வரும் பொதுமக்கள், தெரிந்தவர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்து கொடுத்தனர். அந்த வகையில், இதுவரை சுமார் ரூ.500 கோடி வரை வசூல் செய்து கொடுத்தனர்.
ஆனால் உறுதியளித்தபடி கமிஷன் தொகையை ஜான் பிரபாகரன் தரவில்லை.
இதனால் பணத்தை வசூல் செய்து கொடுத்த சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். போலீஸ் கமிஷனர் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை திரும்ப பெற்றுத் தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இது கொஞ்சம் குழப்பமான விவகாரமாக உள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றுக்காக இவர்கள், ஆலயத்துக்கு வருபவர்களிடமும் பணம் வசூல் செய்து கொடுத்துள்ளார்கள். இவர்களுக்கே கமிஷன் வரவில்லை என்றால், முதலீடு செய்தவர்களின் பணம் என்னாயிற்று?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக