சத்யமேவ ஜெயதேவுக்காக ஆமீர் கானை பெருமைப்படுத்திய டைம் பத்திரிக்கை
சமூகப் பிரச்சனைகளை அலசி, ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி அமெரி்க்கா வரை பிரபலமாகியுள்ளது. இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற இந்நிகழ்ச்சி பற்றி அமெரிக்காவின் முன்னணி பத்திரிக்கையான டைம் பத்திரிக்கையில் கட்டுரை வந்துள்ளது. அது மட்டுமி்ன்றி அட்டைப்படத்தில் ஆமீர் கானின் போட்டோவைப் போட்டுள்ளனர். இதன் மூலம் டைம் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் வந்த முதல் பாலிவுட் ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆமீர்.
முன்னதாக நடிகைகள் ஐஸ்வர்யா ராய், பர்வீன் பாபி ஆகியோரின் படங்களும் டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தை அலங்கரித்தன.
அவர்கள் தவிர முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, சச்சின் டெண்டுல்கர், சானியா மிர்சா மற்றும் தற்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரின் போட்டோவும் டைம் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக