நிச்சயம் செய்த பிறகு தன்னுடன் ஒருமாதம் ஒன்றாக வசித்த இயக்குநர்
ரவிக்குமார், திருமணத்துக்கு மறுத்து திடீரென்று ஓடிவிட்டதால்தான் சுஜிபாலா
தற்கொலைக்கு முயன்றதாக தகவல் கசிந்துள்ளது.
அய்யாவழி படத்தில்
கதாநாயகியாக நடித்தவர் சுஜிபாலா. கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக,
கிச்சா வயது 16, ரஜினியின் சந்திரமுகி உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.இவரது சொந்த ஊர் நாகர்கோவில் வைத்தியநாதபுரம். தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். படத்தை இயக்கி நடிக்கும் ரவிக்குமார் சுஜிபாலாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
சுஜிபாலாவின் பெற்றோரை ரவிக்குமார் சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் பெற்றார். அதைத்தொடர்ந்து கடந்த ஜூலை 5-ந்தேதி சுஜிபாலாவுக்கும், ரவிக்குமாருக்கும் திருமண நிச்சயதார்த்தம் ஈத்தாமொழி அருகே உள்ள கொய்யன் விளையில் நடந்தது. நடிகைகள் ஷகீலா, கும்தாஜ், பாபி லோனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.
அப்போது திருமணத்தை திருச்செந்தூர் கோவிலில் இன்று நடத்த முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் சுஜிபாலா நேற்று முன்தினம் திடீரென அதிக தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார்.
வீட்டில் மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதலில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவே சுஜிபாலா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் இதை மறுத்தனர். காய்ச்சல் காரணமாகத்தான் சுஜிபாலா சிகிச்சைப் பெற்று வருவதாகக் கூறினர்.
ஆனால் இப்போது பலவித தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.
சுஜிபாலாவை மணக்க இயக்குனர் ரவிக்குமார் திடீரென மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் பரவியுள்ளது. சுஜிபாலா சம்மதத்துடனேயே நிச்சயதார்த்தம் நடந்ததாம். அதன் பிறகு கடந்த ஒரு மாதமாக இருவரும் கணவன் மனைவியாகவே வசித்தார்களாம். ஆனால் இப்போது ரவிக்குமார் மனம் மாறி திருமணத்துக்கு மறுப்பு சொன்னதால் தற்கொலைக்கு முயன்றார் என்கிறார்கள்.
நிச்சயதார்த்ததுக்கு முன்பே சுஜிபாலாவுக்கும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி இயக்குநராகப் பணியாற்றும் ஒருவருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இது தெரிந்ததால் இயக்குநர் திருமணத்துக்கு மறுத்து ஓடிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.
சுஜிபாலா தற்கொலை முயற்சி காரணமாக திருச்செந்தூரில் நடக்க இருந்த திருமணம் நின்றது. ரவிக்குமாரையும். சுஜிபாலாவை உடல்நலம் விசாரிக்கவும் அவர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்குது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக